பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 'சோலார்' நிலையம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
சென்னை : சென்னையில் சூரியசக்தி மின் நிலையம் அமைத்து, தலைமை செயலகம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு பசுமை மின்சாரம் வினியோகிக்கும் பணியை, மின் வாரியம் துவக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சென்னை, பேசின்பிரிட்ஜ் அருகில், மின் வாரியத்திற்கு, பல ஏக்கரில் நிலம் உள்ளது.புகார்அங்கு, ஜி.எம்.ஆர்., என்ற தனியார் நிறுவனம், எரிவாயு மின் நிலையம் அமைத்து, அங்கு உற்பத்தியான
 சென்னையில் 'சோலார்' நிலையம்

சென்னை : சென்னையில் சூரியசக்தி மின் நிலையம் அமைத்து, தலைமை செயலகம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு பசுமை மின்சாரம் வினியோகிக்கும் பணியை, மின் வாரியம் துவக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை, பேசின்பிரிட்ஜ் அருகில், மின் வாரியத்திற்கு, பல ஏக்கரில் நிலம் உள்ளது.புகார்அங்கு, ஜி.எம்.ஆர்., என்ற தனியார் நிறுவனம், எரிவாயு மின் நிலையம் அமைத்து, அங்கு உற்பத்தியான மின்சாரத்தை, மின் வாரியத்திற்கு விற்பனை செய்தது.அந்நிறுவனத்திடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, 2015ல், ஜி.எம்.ஆர்., நிறுவனத்துடன் மின் கொள்முதல்ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், அது நீட்டிக்கப்படவில்லை.

அந்நிறுவனத்திடம் இருந்து, மின் வாரியம்,2018ல் நிலத்தை திரும்ப பெற்றது. அந்த இடத்தில், மின் வாரியம், சொந்த செலவில், சூரியசக்தி மின் நிலையம் அமைத்து, அங்கு உற்பத்தியாகும் பசுமை மின்சாரத்தை தலைமை செயலகத்திற்கு வினியோகிக்க திட்டமிட்டது.மேலும், சென்னையின் மின் தேவை அதிகரித்து வருவதால், பேசின்பிரிட்ஜ் அருகில் உள்ள இடத்தில் சூரியசக்தி மின் நிலையத்திற்கு பதில், 730 மெகா வாட் திறனில் இரு அலகுகள் உடைய எரிவாயு மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.

எரிவாயு மின் நிலையம்அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டதில், பேசின்பிரிட்ஜ் பகுதியில் குடியிருப்புகள் அதிகம் இருப்பதால், எண்ணுாரில் மூடப்பட்டுள்ள அனல் மின் நிலைய இடத்தில், எரிவாயு மின் நிலையம் அமைக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது.இதனால், எண்ணுாரில் எரிவாயு மின் நிலையம் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

எனவே, ஏற்கனவே திட்டமிட்டபடி, பேசின்பிரிட்ஜ் அருகில் உள்ள இடத்தில், சூரியசக்தி மின் நிலையம் அமைத்து, அங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை, தலைமை செயலகம், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்துாரார் பல்நோக்கு மருத்துவமனைகளுக்கு மட்டும் வினியோகிக்கும் பணியை, மின் வாரியம் துரிகதியில் துவக்குமா என்ற எதிர்பார்ப்பு ஊழியர்களிடம் எழுந்துள்ளது.

அருங்காட்சியகம்மின் வாரியம், பேசின்பிரிட்ஜ் அருகில் உள்ள இடத்தில், சூரியசக்தி மின் நிலையம் மட்டுமின்றி, மின் உற்பத்தி, மின் வினியோகம், மின் தொடரமைப்பை காட்சிப்படுத்த கூடிய அருங்காட்சியகமும் அமைக்கலாம். இது, இன்ஜினியரிங்படிக்கும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். மின்சாரம் தொடர்பான விபரங்களை பொது மக்களும் அறிந்து கொள்ள முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X