பொது செய்தி

தமிழ்நாடு

பயன்பாட்டுக்கு வருமா தனியார் படகு குழாம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானல் தனியார் படகு குழாமை நகராட்சி வசப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.கொடைக்கானலில் கடந்த 1921ல் நகராட்சிக்கு சொந்தமான படகு குழாமை வருவாய்த் துறையினர், தனியாருக்கு 49 ஆண்டுகள் என இருமுறை குத்தகைக்கு விடுத்தது.2019 ல் குத்தகை காலம் நிறைவுற்றது. கொடைக்கானல் வழக்கறிஞர் ஆரோக்யசாமி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரூ.பல கோடி வருவாய் இழப்பு, குத்தகை

கொடைக்கானல் : கொடைக்கானல் தனியார் படகு குழாமை நகராட்சி வசப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.கொடைக்கானலில் கடந்த 1921ல் நகராட்சிக்கு சொந்தமான படகு குழாமை வருவாய்த் துறையினர், தனியாருக்கு 49 ஆண்டுகள் என இருமுறை குத்தகைக்கு விடுத்தது.2019 ல் குத்தகை காலம் நிறைவுற்றது.

கொடைக்கானல் வழக்கறிஞர் ஆரோக்யசாமி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரூ.பல கோடி வருவாய் இழப்பு, குத்தகை நீட்டிப்பிற்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தார். இதனால் தனியார் படகு குழாம் குத்தகை நீட்டிப்பிற்கு நீதிமன்றம் தடைவிதித்தது.நகராட்சி நிர்வாகம் படகு குழாமிற்கு சீல் வைத்தது. இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் பயன்பாட்டிற்கு வராத படகு குழாம் வெறுமனே உள்ளது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி பொது ஏலம் நடத்தி ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும். அல்லது நகராட்சியே படகு குழாமை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இங்குள்ள ஸ்கல் போட்டிங் மூலம் பயிற்சி கொடுக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருவாய் கிடைக்க வழி ஏற்படும். படகு குழாமை நகராட்சி பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X