உரத்தட்டுப்பாடு இருக்காதுனு அதிகாரிகள்டூ சொன்னது என்னாச்சு?கிடைக்கலேனு தவிக்கிறாங்க விவசாயிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உரத்தட்டுப்பாடு இருக்காதுனு அதிகாரிகள்டூ சொன்னது என்னாச்சு?கிடைக்கலேனு தவிக்கிறாங்க விவசாயிகள்

Added : செப் 01, 2021
Share
பெ.நா.பாளையம்;கோவை மாவட்டத்தில், யூரியா, டி.ஏ.பி., கலப்பு உரங்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.1,000 டன் தருவிக்கப்பட்டு, வினியோகிக்கப்படும் என,வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், தட்டுப்பாடு தொடர்வதாக, விவசாயிகள் புலம்புகின்றனர்.கோவை மாவட்டத்தில், விவசாயிகள் பல்வேறு தோட்டக்கலை, எண்ணெய் வித்துகளை சாகுபடி செய்துள்ளனர். ஆனால், தென்னை, வாழை, உதிரி

பெ.நா.பாளையம்;கோவை மாவட்டத்தில், யூரியா, டி.ஏ.பி., கலப்பு உரங்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.1,000 டன் தருவிக்கப்பட்டு, வினியோகிக்கப்படும் என,வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், தட்டுப்பாடு தொடர்வதாக, விவசாயிகள் புலம்புகின்றனர்.கோவை மாவட்டத்தில், விவசாயிகள் பல்வேறு தோட்டக்கலை, எண்ணெய் வித்துகளை சாகுபடி செய்துள்ளனர். ஆனால், தென்னை, வாழை, உதிரி மலர்கள், மக்காச் சோளம் உள்ளிட்டவைகளுக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., கலப்பு உரங்கள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாகவே, யூரியாவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை, மாவட்டநிர்வாகத்தின் கவனத்துக்கு,விவசாயிகள் கொண்டு சென்றனர்.1000 டன் அப்போது, 'கோவை மாவட்டத்துக்கு, ஆகஸ்ட் மாதத்துக்கு உரம், 1,850 டன் வினியோகம் செய்யப்பட வேண்டும். இதுவரை, 836 டன் உரம் பெறப்பட்டு, அனைத்து வட்டாரங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.'இப்கோ' நிறுவனம் மூலம், ஆகஸ்ட் இறுதியில், எஞ்சிய 1,000 மெட்ரிக் டன் யூரியா உரம், கோவை மாவட்டத்துக்கு வழங்கப்படும். இதன் மூலம் பற்றாக்குறை சரி செய்யப்படும்' என்று, வேளாண் துறையினர் தெரிவித்து இருந்தனர். இதுதொடர்பாக, 'தினமலர்' நாளிதழில், கடந்த 26ம் தேதி செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், அதிகாரிகள் உறுதியளித்தபடி, இதுவரை உரத் தட்டுப்பாடு நீங்கவில்லை.இதுதொடர்பாக, விவசாயிகள் கூறியதாவது:பயிர் சாகுபடிக்கான பருவ காலம் துவங்கி, பருவ மழை பெய்யத் தொடங்கிவிட்டது. மாவட்டத்தில், அதிகளவு பயிர் செய்யப்பட்டுள்ள வாழை, தென்னை,காய்கறிகள், உதிரி மலர்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு, உரமிட, யூரியா, டி.ஏ.பி., மற்றும் கலப்பு உரங்களுக்கு, கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தற்போது, சில தனியார் நிறுவனங்களை தவிர,கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவு உரங்கள் இருப்பு இல்லை.கோவை மாவட்டத்தில், இப்கோ, கிரிப்கோ உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களின் வாயிலாக உர வினியோகம் கடந்த பிப்., மார்ச் மாதங்களில், குறைந்த அளவு மட்டுமே நடந்தது. அதன் பிறகுஉர வினியோகம் நடைபெறவில்லை.வினியோகம் இல்லை கடந்த, 5 மாதங்களாக கிரிப்கோ, இப்கோ உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களின் வாயிலாக, உர வினியோகம் போதுமான அளவு இல்லை.விவசாயிகள் பலர் பயிர் கடன் பெற்றும், உரங்களை கொள்முதல் செய்ய முடியாத, இக்கட்டான நாளைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில் நிலவும் யூரியா, டி.ஏ.பி., மற்றும் கலப்பு உரங்கள் தட்டுப்பாட்டால், மகசூல் குறையும் சூழல் உருவாகியுள்ளது.மாவட்ட நிர்வாகம், இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X