பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலையொட்டி மின்னணு ஓட்டுப்பதிவு தயார்

Added : செப் 01, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாக்காளர் பட்டியல், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயார்படுத்தும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.கடந்த 2016 ல் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்தது. அந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்த போது, இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்னை

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாக்காளர் பட்டியல், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயார்படுத்தும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2016 ல் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்தது. அந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்த போது, இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்னை எழுந்ததால் கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.இதன் பின் தற்போது வரை தேர்தல் நடத்தப்படவில்லை.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க, சட்டசபை தேர்தலின் போது 1,050 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி உருவாக்கப்பட்டது. அதேபோல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலிலும் ஓட்டுச்சாவடிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

எந்நேரமும் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வரலாம் என்பதால் திண்டுக்கல் மாநகராட்சி, ஒட்டன்சத்திரம், பழநி, கொடைக்கானல் ஆகிய நகராட்சிகள், 23 பேரூராட்சிகளில் வார்டு வாரியாக வாக்காளர்கள் பட்டியலை தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் புதிய வாக்காளர்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்த 5 ஆயிரத்து 500 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வந்துள்ளன. அவற்றில் உள்ள பழைய பதிவுகளை அழித்து, புதிய எண்கள் பதிவிட்டு தேர்தலுக்கு தயார் படுத்த ஆயத்தமாகி வருகின்றனர். வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஓட்டுச்சாவடிகளை கூடுதலாக அமைக்கவும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X