பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.7.60 லட்சம் மதிப்புள்ள 51 அலைபேசிகள் மீட்பு 

Added : செப் 01, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் காணாமல் போன 51 அலைபேசிகள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் நேற்று எஸ்.பி., ஸ்ரீனிவாசன் தலைமையில் ஒப்படைக்கப்பட்டன.மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலையோரம் பேசிக் கொண்டு செல்வோரிடமிருந்து அலைபேசிகளை மர்ம நபர்கள் பறித்துச் செல்கின்றனர். பஸ் பயணங்களிலும் பலர் பறிகொடுத்துள்ளனர். இதுபோன்று காணாமல் போனவற்றை மீட்டுத் தரக் கோரி,
 ரூ.7.60 லட்சம் மதிப்புள்ள 51 அலைபேசிகள் மீட்பு 

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் காணாமல் போன 51 அலைபேசிகள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் நேற்று எஸ்.பி., ஸ்ரீனிவாசன் தலைமையில் ஒப்படைக்கப்பட்டன.

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலையோரம் பேசிக் கொண்டு செல்வோரிடமிருந்து அலைபேசிகளை மர்ம நபர்கள் பறித்துச் செல்கின்றனர். பஸ் பயணங்களிலும் பலர் பறிகொடுத்துள்ளனர். இதுபோன்று காணாமல் போனவற்றை மீட்டுத் தரக் கோரி, அதன் உரிமையாளர்கள் பல ஸ்டேஷன்களில் புகார் அளித்துள்ளனர்

.இவ்வாறு சமீப நாட்களில் காணாமல் போன 51 அலைபேசிகள், சைபர் குற்றப் பிரிவு போலீசார் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.எஸ்.பி., ஸ்ரீனிவாசன், கூடுதல் எஸ்.பி., சந்திரன் ஆகியோர் அலைபேசிகளை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். போலீசார் கூறுகையில், ''மீட்கப்பட்டுள்ள 51 அலைபேசிகளின் மதிப்பு ரூ.7,60,900 என தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X