விநாயகர் சிலைக்கு களிமண் கிடைக்குமா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சிலைக்கு களிமண் கிடைக்குமா

Added : செப் 01, 2021
Share
திண்டுக்கல் : 'விநாயகர் சிலை செய்ய குளங்களில் களிமண் எடுக்க அனுமதிக் கோரி', கலெக்டர் விசாகனிடம், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் சங்கத்தினர் விநாயகர் சிலையுடன் வந்து மனு கொடுத்தனர்.மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் அளித்த மனு: சதுர்த்தியை முன்னிட்டு மண்பாண்ட தொழிலாளர்கள் ஏரி, குளங்களில் களிமண் எடுத்து விநாயகர் சிலை செய்து விற்பது வழக்கம். கொரோனா காலம் என்பதால்

திண்டுக்கல் : 'விநாயகர் சிலை செய்ய குளங்களில் களிமண் எடுக்க அனுமதிக் கோரி', கலெக்டர் விசாகனிடம், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் சங்கத்தினர் விநாயகர் சிலையுடன் வந்து மனு கொடுத்தனர்.

மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் அளித்த மனு: சதுர்த்தியை முன்னிட்டு மண்பாண்ட தொழிலாளர்கள் ஏரி, குளங்களில் களிமண் எடுத்து விநாயகர் சிலை செய்து விற்பது வழக்கம். கொரோனா காலம் என்பதால் வீட்டிலேயே சிலை வைத்து வழிபட அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக, விநாயகர் சிலை செய்து விற்க மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களில் செப்.3 முதல் செப்.6 வரை களிமண் எடுக்க அனுமதிக்க வேண்டும், என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X