பொது செய்தி

தமிழ்நாடு

கல்லை கடவுளாக்கிய மாநகராட்சிக்கு எதிர்ப்பு

Added : செப் 01, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் கிருஷ்ணாராவ் தெருவில் மாநகராட்சி சார்பில் கல்லுக்கு பொட்டு வைத்து சாமி போல் சித்தரித்ததற்கு ஹிந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநகராட்சி சார்பில் தெருக்கள், பொது இடங்களில் குப்பை கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குப்பையை பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் பழநி ரோட்டில் உள்ள

திண்டுக்கல் : திண்டுக்கல் கிருஷ்ணாராவ் தெருவில் மாநகராட்சி சார்பில் கல்லுக்கு பொட்டு வைத்து சாமி போல் சித்தரித்ததற்கு ஹிந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாநகராட்சி சார்பில் தெருக்கள், பொது இடங்களில் குப்பை கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குப்பையை பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் பழநி ரோட்டில் உள்ள கிருஷ்ணாராவ் தெருவில் பொதுமக்கள் குப்பை கொட்டும் இடத்தை மாநகராட்சி சார்பில் சுத்தம் செய்து, 2 கல்லுக்கு மஞ்சள் பூசி, பொட்டு வைத்து சாமி போல் சித்தரித்து அதன் முன்பு கோலமிட்டனர்.

இவ்விடத்தில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என எழுதியிருந்தனர். ஹிந்து தெய்வங்களை இழிவுப்படுத்துவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஹிந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கல்லை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X