வாக்காளர் பட்டியல்ல பேர் இருக்கா?மாவட்ட கவுன்சிலர் தேர்தல் வருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல்ல பேர் இருக்கா?மாவட்ட கவுன்சிலர் தேர்தல் வருது

Added : செப் 01, 2021
Share
அன்னுார்;மாவட்ட கவுன்சிலர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.கோவை மாவட்ட ஊராட்சி, வார்டு எண் 3, அன்னுார் ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளை உள்ளடக்கியது.இந்த வார்டின் மாவட்ட கவுன்சிலராக இருந்த அமுல் கந்தசாமி, கடந்த சட்டசபை தேர்தலில் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து, மாவட்ட கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார்.கடந்த நான்கு
 வாக்காளர் பட்டியல்ல பேர் இருக்கா?மாவட்ட கவுன்சிலர் தேர்தல் வருது

அன்னுார்;மாவட்ட கவுன்சிலர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.கோவை மாவட்ட ஊராட்சி, வார்டு எண் 3, அன்னுார் ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளை உள்ளடக்கியது.இந்த வார்டின் மாவட்ட கவுன்சிலராக இருந்த அமுல் கந்தசாமி, கடந்த சட்டசபை தேர்தலில் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து, மாவட்ட கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார்.கடந்த நான்கு மாதங்களாக மாவட்ட கவுன்சிலர் பதவி காலியாக உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடக்கின்றன.அத்துடன் கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3ல், தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த வார்டில், 28 ஆயிரத்து 477 ஆண் வாக்காளர்கள், 30 ஆயிரத்து 224 பெண் வாக்காளர்கள் உட்பட 59 ஆயிரத்து 501 வாக்காளர்கள் உள்ளனர். 100 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது, இதையடுத்து, பொகலுார், வடக்கலுார், அக்கரை செங்கப்பள்ளி, கணுவக்கரை, ஆம்போதி, பசூர், அ.மேட்டுப்பாளையம், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ஒட்டர்பாளையம், கரியாம்பாளையம், காரேகவுண்டன்பாளையம், பிள்ளையப்பம்பாளையம் உள்ளிட்ட, 15 ஊராட்சி அலுவலகங்களில், நேற்று வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டது.மாவட்ட கவுன்சிலர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது குறித்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் அல்லது தண்டோரா மூலம் தகவல் தெரிவிக்கப்படவில்லை.இதனால் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டும், பெரும்பாலான ஊராட்சி அலுவலகங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்க்க பொதுமக்கள் வரவில்லை. ஒரு சிலரே சரிபார்த்தனர்.தேர்தல் அலுவலராக, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ரமேஷ்குமாரும், உதவி தேர்தல் அலுவலராக, மாவட்ட உதவி திட்ட அலுவலர் முத்துக்குமாரசாமியும் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X