பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

Added : செப் 01, 2021
Share
Advertisement
சின்னாளபட்டி : இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 29வது மாநாட்டு ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.இதுகுறித்து தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. 6 - 8ம் வகுப்பு மாணவர்கள் இளையோர் பிரிவிலும், 9 - பிளஸ் 2 மாணவர்களை மூத்தவர் பிரிவிலும் கொண்டு, வழிகாட்டி ஆசிரியர்கள் உதவியுடன் தமிழ், ஆங்கில மொழிகளில் கட்டுரை

சின்னாளபட்டி : இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 29வது மாநாட்டு ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.இதுகுறித்து தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

6 - 8ம் வகுப்பு மாணவர்கள் இளையோர் பிரிவிலும், 9 - பிளஸ் 2 மாணவர்களை மூத்தவர் பிரிவிலும் கொண்டு, வழிகாட்டி ஆசிரியர்கள் உதவியுடன் தமிழ், ஆங்கில மொழிகளில் கட்டுரை சமர்ப்பிக்கலாம்.நிலைப்புரு வாழ்க்கைக்கான அறிவியல் (science for sustainable living) என்ற தலைப்பில், 5 உட்பிரிவுகளை குறிப்பிட்டுள்ளனர்.

குழுத் தலைவர் உறுப்பினர் பெயர், வயது, பள்ளியின் பெயர், வீட்டு முகவரி, வழிகாட்டி ஆசிரியர் பெயர், வீட்டு முகவரி, அலைபேசி எண் விபரங்களுடன் (parameshwaritnsf@gmail.comல்) பதிவு செய்ய வேண்டும். கட்டணம் இல்லை. வழிகாட்டி ஆசிரியர்களுக்கான இணையவழி பயிற்சியும் உண்டு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X