பொது செய்தி

தமிழ்நாடு

பெண்கள், குழந்தைகளே எதுக்குங்க பயம்?விழிப்புணர்வில் போலீஸ் 'அட்வைஸ்'

Added : செப் 01, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி;"பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு, அச்சுறுத்தல் எந்த வடிவத்தில் வந்தாலும், போலீசாரை அணுகஅச்சப்பட வேண்டாம்," என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'சைல்டு லைன்' சார்பில், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு, பெண்கள் மற்றும்
 பெண்கள், குழந்தைகளே   எதுக்குங்க பயம்?விழிப்புணர்வில் போலீஸ் 'அட்வைஸ்'

கருமத்தம்பட்டி;"பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு, அச்சுறுத்தல் எந்த வடிவத்தில் வந்தாலும், போலீசாரை அணுகஅச்சப்பட வேண்டாம்," என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'சைல்டு லைன்' சார்பில், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையம் ஊராட்சி குளத்துப்பாளையத்தில், குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை பேசுகையில்,"குழந்தைகள் பல்வேறு கனவுகளோடு இருப்பர். அவர்களுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம். அதேபோல், குழந்தைகளை, தொழிலாளர்களாக மாற்றி வேலை வாங்குவதும் குற்றம். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு எந்த வகையில் அச்சுறுத்தல் வந்தாலும், போலீசாரை அணுக மக்கள் அச்சப்படத் தேவையில்லை. 24 மணி நேரமும் செயல்படும், அவசர இலவச போன் 1098ல் அழைத்து புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, குழந்தை திருமண தடை குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. திட்ட ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார், உறுப்பினர் நவீன்குமார், சமூக நலத்துறை அலுவலர் திலகவதி உள்ளிட்டோர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X