அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசை எதிர்த்து தீவிர பிரசாரம்: அழகிரி

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை : ''பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு விற்பதை எதிர்த்து, தீவிர பிரசாரம் மேற்கொள்வோம்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறினார்.சட்டசபை தேர்தலில், மக்கள்நீதி மய்யம் கட்சி சார்பில், சோளிங்கர் தொகுதியில் போட்டியிட்ட ஜவஹர் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் உறுப்பினர்கள், காங்கிரசில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.பின், அழகிரி பேட்டி:தேசிய அளவில்,
Congress, KS Alagiri, privatisation, Indian National Congress

சென்னை : ''பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு விற்பதை எதிர்த்து, தீவிர பிரசாரம் மேற்கொள்வோம்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறினார்.

சட்டசபை தேர்தலில், மக்கள்நீதி மய்யம் கட்சி சார்பில், சோளிங்கர் தொகுதியில் போட்டியிட்ட ஜவஹர் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் உறுப்பினர்கள், காங்கிரசில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.


பின், அழகிரி பேட்டி:


தேசிய அளவில், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான கட்சியாக, காங்கிரஸ் திகழ்கிறது. பா.ஜ., மக்களை பிரிக்கிறது; காங்., ஒன்றிணைக்கிறது.நாட்டில் துறைமுகங்கள், எண்ணெய் நிறுவனங்கள், சுரங்கங்கள் போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தும், காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்டன. தற்போது, பா.ஜ., அரசு, நாட்டின் சொத்துக்களை, தனியாருக்கு விற்பனை செய்து வருகிறது. லாபகரமாக இயங்காத பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுவதை கூட ஏற்கலாம்.


latest tamil news



ஆனால், நல்ல லாபத்துடன் இயங்கி வரும் நிறுவனங்கள் விற்கப்படுவதை ஏற்க முடியாது. மன்மோகன்சிங் ஆட்சியில், கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும், ரயில்வே துறையை தனியார் மயமாக்க, நாங்கள் ஒருபோதும் முயற்சி செய்ததில்லை. எனவே, இந்த திட்டத்தை எதிர்த்து, தமிழக காங்கிரஸ் பிரசாரம் மேற்கொள்ளும்.இவ்வாறு, அவர் கூறினார்.

தமிழக மகளிர் காங்., தலைவர் சுதா ராமகிருஷ்ணன் கூறுகையில், ''சட்டசபை தேர்தலில், பெண்களுக்கு போட்டியிட, 50 சதவீதம் வாய்ப்பு வழங்கியதற்காக, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை பாராட்டினோம். இப்போது, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றச்சாட்டை, சீமான் ஆதரித்து பேசுவதை கண்டிக்கிறோம்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-செப்-202112:20:24 IST Report Abuse
அருணா இனியாவது மக்களுக்கு செய்யப்போகும் நல்லதை செய்ய ஸ்டாக் இல்லை போலும். தனித்து நிற்க முயலுங்கள்
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
01-செப்-202111:29:27 IST Report Abuse
M S RAGHUNATHAN விஷயம் தெரியாதவன் எல்லாம் ஏன் பேசறான். குத்தகைக்கும், விற்பனைக்கும் வித்தியாசம் தெரியாதவன் காங்கிரஸ் தலைவர். விளங்கிடும் கட்சி. அது சரி உங்கள் தலைவர் எப்படி நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையை கைப்பற்றினார் ?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
01-செப்-202111:28:27 IST Report Abuse
sankaseshan கிருஸ்துவனுங்ககூட ஜெபக்கூட்டம் நடத்தினால் மோடிஜியை பதவியில் இருந்து இறக்கி விடலாம் வேற வேலையில்லாத முட்டா பயலே நீயும் பப்புவை போலவே இருக்கிறாய்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X