பொது செய்தி

தமிழ்நாடு

'ரூ.3 கோடிய வச்சுகிட்டே தரமாட்றாங்க'

Added : செப் 01, 2021
Share
Advertisement
அன்னுார்:பதவியேற்று, 20 மாதங்கள் ஆகியும், வெறும், ஏழு லட்சம் ரூபாய் மட்டுமே, ஒதுக்கப்பட்டதால், ஒன்றிய கவுன்சிலர்கள் தவிக்கின்றனர்.ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2019 டிசம்பரில் தேர்தல் நடந்தது. 2020 ஜனவரியில் பொறுப்பேற்றனர். பொறுப்பேற்று 20 மாதங்கள் முடிந்து விட்டது. எனினும், போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என, புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால்

அன்னுார்:பதவியேற்று, 20 மாதங்கள் ஆகியும், வெறும், ஏழு லட்சம் ரூபாய் மட்டுமே, ஒதுக்கப்பட்டதால், ஒன்றிய கவுன்சிலர்கள் தவிக்கின்றனர்.ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2019 டிசம்பரில் தேர்தல் நடந்தது. 2020 ஜனவரியில் பொறுப்பேற்றனர். பொறுப்பேற்று 20 மாதங்கள் முடிந்து விட்டது. எனினும், போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என, புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கூறியதாவது:சராசரியாக, 6 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட வார்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுக்கு, 20 மாதங்களுக்கும் சேர்ந்து, வெறும் ஏழு லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.ஒன்றிய கவுன்சிலர்களான எங்களிடம் பொதுமக்கள், சாலை, சாக்கடை வடிகால், குடிநீர், போர்வெல், சமுதாயக்கூடம் என, ஏராளமான கோரிக்கைகளுக்கு மனு அளிக்கின்றனர். ஒன்றிய கவுன்சிலர்களை விட, குறைந்த வாக்காளர்கள் உள்ள ஊராட்சிகளுக்கு கூட அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. ஒன்றிய பொது நிதியில் 3 கோடி ரூபாய் உள்ளது. எனினும், அதிகாரிகளின் மெத்தனத்தால் நிதி வழங்கப்படவில்லை. '15 ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் ஒதுக்குகிறோம். 10 லட்ச ரூபாய்க்கான பணியை தேர்வு செய்து சமர்ப்பியுங்கள்' என்று மூன்று மாதங்களுக்கு முன் தெரிவித்தனர்.இதையடுத்து, பணிகளை தேர்வு செய்து, ஒன்றிய அதிகாரிகளிடம் சமர்ப்பித்து ஒன்றரை மாதம் ஆகிவிட்டது. ஆனால், அந்த பணிகளுக்கு டெண்டர் விட, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்காக ஒன்றிய அலுவலகத்திற்கு நடையாய் நடக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X