பொது செய்தி

இந்தியா

பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க பஞ்சமசாலி பீடம் கோரிக்கை

Added : செப் 01, 2021
Share
Advertisement
மைசூரு : ''பஞ்சமசாலி லிங்காயத் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் '2 ஏ' பிரிவில் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அக்டோபர் 1 முதல் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்,'' என கூடலசங்கமா பஞ்சமசாலி பீடத்தின் மடாதிபதி பசவ ஜெய மிருதஞ்சயா சுவாமி எச்சரித்துள்ளார்.பஞ்சமசாலி லிங்காயத் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் '2 ஏ' பிரிவில் சேர்க்க வலியுறுத்தி
பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க பஞ்சமசாலி பீடம் கோரிக்கை

மைசூரு : ''பஞ்சமசாலி லிங்காயத் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் '2 ஏ' பிரிவில் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அக்டோபர் 1 முதல் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்,'' என கூடலசங்கமா பஞ்சமசாலி பீடத்தின் மடாதிபதி பசவ ஜெய மிருதஞ்சயா சுவாமி எச்சரித்துள்ளார்.

பஞ்சமசாலி லிங்காயத் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் '2 ஏ' பிரிவில் சேர்க்க வலியுறுத்தி கூடலசங்கமா பஞ்சமசாலி பீடத்தின் மடாதிபதி பசவ ஜெய மிருதஞ்சயா சுவாமி தலைமையில் சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் பெரிய அளவில் போராட்டம் நடந்தது.அப்போது முதல்வராக இருந்த எடியூரப்பா, அதை சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் சி.சி.பாட்டீல், முருகேஷ் நிரானி ஆகியோர் மூலம் சமாதானப்படுத்தினார்.

ஆனாலும் இதுவரை அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இது குறித்து, மடாதிபதி மைசூரில் கூறியதாவது:கவுடா லிங்காயத், மலேகவுடா, தீக் ஷ லிங்காயத் அடங்கிய பஞ்சமசாலி லிங்காயத் சமுதாயத்தை, பிற்படுத்தப்பட்டோர் 2 ஏ பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.அரசு நடவடிக்கை எடுக்க வரும் 15 வரை கால அவகாசம் கேட்டுள்ளது. ஒரு வேளை நடவடிக்கை எடுக்காவிட்டால், அக்டோபர் 1ல் இருந்து பெங்களூரு சுதந்திர பூங்காவில் பெரிய அளவில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்.

அரசியலுக்காக மட்டுமே எங்கள் சமுதாயத்தினர் பயன்படுத்தி கொள்கின்றனர். அடுத்த சட்டசபை தேர்தலில் எங்கள் சமுதாயத்தினருக்கு அதிக வாய்ப்பு தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X