பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளை கவரும் வகையில் அங்கன்வாடி சுவரில் ஓவியங்கள்

Added : செப் 01, 2021
Share
Advertisement
வண்ணாரப்பேட்டை : பழைய வண்ணாரப்பேட்டையில், குழந்தைகளை கவரும் வகையில் அங்கன்வாடி மையத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.சென்னையை அழகுபடுத்தும் வகையில், மாநகராட்சியினர் பல்வேறு இடங்களில் ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.பழைய வண்ணாரப்பேட்டை, டி.பி.கே.தெருவில் அங்கன்வாடி மையம் உள்ளது.இங்கு 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு, ஆரம்பக்கால கல்வி
 குழந்தைகளை கவரும் வகையில் அங்கன்வாடி சுவரில் ஓவியங்கள்

வண்ணாரப்பேட்டை : பழைய வண்ணாரப்பேட்டையில், குழந்தைகளை கவரும் வகையில் அங்கன்வாடி மையத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

சென்னையை அழகுபடுத்தும் வகையில், மாநகராட்சியினர் பல்வேறு இடங்களில் ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.பழைய வண்ணாரப்பேட்டை, டி.பி.கே.தெருவில் அங்கன்வாடி மையம் உள்ளது.

இங்கு 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு, ஆரம்பக்கால கல்வி வழங்கப்படுகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளை கவரும் வகையில் தண்டையார்பேட்டை மாநகராட்சியினர் ஓவியங்களை வரைந்து அசத்தி உள்ளனர்.

இதில், குழந்தைகள் விரும்பும் 'டோரா கார்ட்டூன்' வரைபடங்களும், யானை, ஒட்டகச்சிவிங்கி, சிங்கம், முயல், முதலை உள்ளிட்ட விலங்குகளும் தத்ரூபமாக வரையப்பட்டு உள்ளன.இவை, குழந்தைகளை மட்டுமின்றி, பொதுமக்களையும் கவரும் வகையில் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X