பொது செய்தி

இந்தியா

துவக்கப்பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை; மருத்துவ சங்கம் கோரிக்கை

Added : செப் 01, 2021
Share
Advertisement
பெங்களூரு : கொரோனா மூன்றாம் அலைக்கான சூழல் இருப்பதால் துவக்கப்பள்ளிகள் திறப்பதை ஒத்தி வைக்க, மாநில அரசு ஆலோசிக்க வேண்டுமென மருத்துவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.தனியார் மருத்துவர்கள் மற்றும் நர்சிங் ஹோம்ஸ் சங்கத்தில், 1,000க்கும் அதிகமான மருத்துவமனைகள் பதிவு செய்துள்ளன.சங்கத்தின் சார்பில் தொழில் நுட்ப நிபுணர்கள், மருத்துவர்கள் குழு அமைத்து, கொரோனா மூன்றாம் அலையின்

பெங்களூரு : கொரோனா மூன்றாம் அலைக்கான சூழல் இருப்பதால் துவக்கப்பள்ளிகள் திறப்பதை ஒத்தி வைக்க, மாநில அரசு ஆலோசிக்க வேண்டுமென மருத்துவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தனியார் மருத்துவர்கள் மற்றும் நர்சிங் ஹோம்ஸ் சங்கத்தில், 1,000க்கும் அதிகமான மருத்துவமனைகள் பதிவு செய்துள்ளன.சங்கத்தின் சார்பில் தொழில் நுட்ப நிபுணர்கள், மருத்துவர்கள் குழு அமைத்து, கொரோனா மூன்றாம் அலையின் பாதிப்பு குறித்து அறிக்கை தயாரித்துள்ளனர்.இந்த அறிக்கையை சுகாதாரத்துறை அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளனர்.சங்கத்தினர் கூறியதாவது:பள்ளிகளை திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான சூழல் இது இல்லை. சில நாடுகளில் பள்ளிகள் திறந்த பின், குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகரித்ததுடன், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் எளிதில் பரவியது.பள்ளிகளில் வகுப்புகள் துவக்கப்படுவதால், மாணவர்கள் பல மணி நேரம் ஒரே வகுப்பில் இருக்க வேண்டும்.இதனால் மூன்றாம் அலை ஏற்படுவதை கவனித்த பின், பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்யலாம். சுகாதாரத்துறை அமைச்சருக்கு இதுகுறித்து அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா அறிகுறிகளுடன் வீட்டில் தனிமையில் இருப்போரை, கொரோனா சிகிச்சை மையங்கள் மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்.

அவர்களுக்கு தொலைபேசி வழியாக சிகிச்சை வழிகாட்டுதல் வழங்க வேண்டும். அதே போல், பாதிக்கப்படுவர், இறப்பு விகிதம், தனிமைப்படுத்தப்படுவோர் உள்ளிட்ட தகவல்கள் இன்னும் குழப்பமான நிலையில் தான் உள்ளன. அவற்றை நேர முறைப்படி பராமரிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X