தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. ஒன்பது முதல், 12 வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அனைத்து பள்ளிகளிலும், துாய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்தன. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர், முதல்வர்,ஆசிரிய, ஆசிரியைகள் பணியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்களா என்பது தொடர்பான சான்று பெற்று,அது தொடர்பான கடிதத்தை இணைத்து, ஆசிரியர்களிடம் இருந்து பெறும் பணியை, சுகாதாரத்துறையினர் செய்து வருகின்றனர்.இதுகுறித்து, சுகாதார துறையினர் கூறுகையில்,' ஆசிரியர் வாயிலாக, மாணவ மாணவியருக்கு தொற்று பரவக் கூடாது என்பதில், அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.இதனால், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்அல்லாத அலுவலர்கள், பணியாளர்கள் கண்டிப்பாக, 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர்'என்றனர்.ஸ்மார்ட் வகுப்புக்கு பயிற்சிகாரமடை அடுத்த, வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில், 931 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 2015ம் ஆண்டிலிருந்து, தொடர்ச்சியாக இப்பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. கடந்த, 20 ஆண்டுகளில் பிளஸ் டூ தேர்வில் இப்பள்ளி, 11 முறை, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இதுதவிர, பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் தேர்ச்சி பெற்று, மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெற்று வருகின்றனர். அதனால், இப்பள்ளிக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில், 1.60 லட்சம் ரூபாய் செலவில் ஸ்மார்ட் வகுப்பு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த மாதம் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டது. ஏற்கெனவே, 2 ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பெள்ளி கூறியதாவது:புதிதாக அமைத்த ஸ்மார்ட் வகுப்பில், எல்.இ.டி., டிவி ஸ்கிரீன் வாயிலாக, மாணவர்களுக்கு எவ்வாறு பாடம் சொல்லிக் கொடுப்பது என்பது குறித்து, ஆசிரியர்கள் செயல்முறை பயிற்சி செய்து பார்த்தனர். கடந்த ஒன்றரை ஆண்டாக, வீடுகளில் இருந்த மாணவர்களுக்கு, இந்த ஸ்மார்ட் டிவி வாயிலாக, பாடங்களை நடத்தும் போது, ஆர்வத்துடன் கவனிக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு தலைமை ஆசிரியர் பெள்ளி கூறினார்.
தமிழ் ஆசிரியர் அருள் சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.வாரத்தில் 6 வேலை நாட்கள்நாளை முதல் திறக்கப்படும் பள்ளிகள், வாரத்தின் ஆறு நாட்கள் தொடர்ந்து செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், வாரத்தில், 6 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக இருக்கும். 10 மற்றும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இட வசதியைப் பொறுத்து, தினமும் வகுப்புகள் நடைபெறும். போதிய இடவசதி இல்லை என்றால், 9 மற்றும், 11ம் மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தலாம். உயர்நிலைப்பள்ளிகளில், 9 மற்றும் 10ம் வகுப்புகள், தினமும் செயல்பட வேண்டும். போதிய இட வசதி இல்லாத பள்ளிகளில் மட்டும் வகுப்புகள், சுழற்சி முறையில் செயல்படலாம்.பள்ளிக்கு வருகை புரிய இயலாத மாணவர்களுக்கு தொடர்ந்து, இணைய வழி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
மருத்துவ உதவி மைய எண் மற்றும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை தகவல் பலகையில், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் தெளிவாக பார்க்கும் வகையில், காட்சிப்படுத்த வேண்டும்.மாணவர்களின் உடல் வெப்பநிலையை நாள்தோறும் கண்காணித்து, உரிய பதிவேட்டில் பராமரித்தல் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு குறிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.கேரளா சென்றவர்களுக்கு தடைசூலுாரில் நடந்த, ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர் கீதா பேசியதாவது:பள்ளியில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
ஒரு வகுப்பறையில், 20 மாணவர்களைமட்டுமே அனுமதித்து, இடைவெளி விட்டு அமர, வைக்க வேண்டும். மாணவர்கள், உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். சானிடைசரால் கைகளை சுத்தம் செய்யவும், முகக்கவசம் அணிந்து இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். கேரளா சென்று வந்த மாணவர்களை, அனுமதிக்க வேண்டாம்.இவ்வாறு, அவர் பேசினார்.மாவட்ட கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.குளம்) விஜயேந்திரன், வகுப்பறைகளில் ஆய்வு மேற்கொண்டார்.சத்துணவு பணியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில், 'பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால், பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
உடனடியாக துணை வட்டார வளர்ச்சி (சத்துணவு) தகவல் தெரிவிக்க வேண்டும். சுத்தமான, சத்தான உணவுகளை சமைத்து தாமதமின்றி மாணவர்களுக்கு வழங்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டது.இன்னும் சுத்தம் செய்யல!காரமடை அடுத்த புஜங்கனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி விளையாட்டு மைதானத்தில், செடிகள் வளர்ந்து புதர் காடாக மாறியுள்ளது. பள்ளி வளாகம் சுத்தம் செய்யாத நிலையிலேயே, இன்று இப்பள்ளி திறக்கப்பட உள்ளது.இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் சத்தியமூர்த்தி கூறியதாவது:பள்ளி விளையாட்டு மைதானம், இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. மைதானத்தில் செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இவற்றை சுத்தம் செய்ய கோரி, காளம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
ஆசிரியர்கள் மற்றும் நன்கொடையாளர் வாயிலாக, மைதானத்தில் உள்ள செடிகள் மீது, களைக்கொல்லி மருந்து அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தலைமை ஆசிரியர் கூறினார்.காளம்பாளையம் ஊராட்சி தலைவர் பொன்னுசாமி கூறுகையில், "கடந்த ஒன்றரை ஆண்டுகளில், மூன்று முறை இப்பள்ளி வளாகத்தையும், விளையாட்டு மைதானத்தையும், ஊராட்சி சார்பில் சுத்தம் செய்யப்பட்டது. இரண்டு முறை களைக்கொல்லி மருந்தும் அடிக்கப்பட்டது. தற்போது, 100 நாள் வேலை திட்ட பணிகள் ஏதும் நடைபெறாததால், பள்ளி வளாகம் சுத்தம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாளை (இன்று) துாய்மைப் பணியாளர்களை அனுப்பி, பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.-நமது நிருபர் குழு-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE