பயங்கரவாதிகள் வந்திருப்பதாக தகவல்| Dinamalar

பயங்கரவாதிகள் வந்திருப்பதாக தகவல்

Added : செப் 01, 2021
மங்களூரு : இலங்கையிலிருந்து 12 பயங்கரவாதிகள் கேரளா வந்துள்ளனர். அவர்கள் கர்நாடகாவுக்குள் நுழைய வாய்ப்பிருப்பதால் உஷாராக இருக்கும்படி மத்திய உளவு துறை, கடலோர காவல்படைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இலங்கையிலிருந்து, 12 பயங்கரவாதிகள் இயந்திர படகு மூலம் கேரளாவின் ஆலப்புழாவுக்கு வந்திருப்பதாக மத்திய உளவு துறை எச்சரித்துள்ளது.அவர்கள் அங்கிருந்து கடல் மார்க்கமாக

மங்களூரு : இலங்கையிலிருந்து 12 பயங்கரவாதிகள் கேரளா வந்துள்ளனர். அவர்கள் கர்நாடகாவுக்குள் நுழைய வாய்ப்பிருப்பதால் உஷாராக இருக்கும்படி மத்திய உளவு துறை, கடலோர காவல்படைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையிலிருந்து, 12 பயங்கரவாதிகள் இயந்திர படகு மூலம் கேரளாவின் ஆலப்புழாவுக்கு வந்திருப்பதாக மத்திய உளவு துறை எச்சரித்துள்ளது.அவர்கள் அங்கிருந்து கடல் மார்க்கமாக கர்நாடகாவுக்கு வந்து பாகிஸ்தான் செல்ல வாய்ப்புள்ளது என்று, தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு கடலோர காவல் படைக்கு தகவல் வந்துள்ளது.இதனால் கடலோர காவல் படையினர், உளவு துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரபி கடலில் சந்தேகப்படும்படி படகு தென்பட்டால் உடனே தகவல் தெரிவிக்கும்படி மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X