இருளில் மூழ்கியுள்ள இரு பாலங்கள்; பல ஆண்டுகளாக தொடருது சோகம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
செங்குன்றம் : முக்கிய சாலைகளை இணைக்கும் இரு பாலங்கள், விளக்கு வசதியின்றி பல ஆண்டுகளாக இருளில் மூழ்கி கிடப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர்கிறது.செங்குன்றம், புழல் ஏரிமதகு அருகே உள்ள உபரி நீர் கால்வாய் மீதுள்ள தரைமட்ட பாலம், 300 அடி நீளம் கொண்டது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட இந்த பாலத்தில், இதுவரை சாலை விளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால், மாலை
 இருளில் மூழ்கியுள்ள இரு பாலங்கள்; பல ஆண்டுகளாக தொடருது சோகம்

செங்குன்றம் : முக்கிய சாலைகளை இணைக்கும் இரு பாலங்கள், விளக்கு வசதியின்றி பல ஆண்டுகளாக இருளில் மூழ்கி கிடப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர்கிறது.

செங்குன்றம், புழல் ஏரிமதகு அருகே உள்ள உபரி நீர் கால்வாய் மீதுள்ள தரைமட்ட பாலம், 300 அடி நீளம் கொண்டது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட இந்த பாலத்தில், இதுவரை சாலை விளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால், மாலை முதல் காலை வரை இருளில் மூழ்கி கிடக்கிறது.நெல் மார்க்கெட்டிற்கு வரும் லாரிகளும், பாலத்தின் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப் படுகின்றன. மேலும், பாலத்தின் ஒரு பகுதியில் டாஸ்மாக் கடை இருப்பதால், மது வாங்கும் குடிமகன்கள், இருள் காரணமாக பாலத்தையே திறந்தவெளி 'பார்' ஆக பயன்படுத்துகின்றனர்.

இதனால், அந்த பகுதியைக் கடக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். பாலத்தைக் கடந்து நடந்து செல்வோரும், குடிமகன்களால் அச்சத்திற்கு ஆளாகின்றனர். அதே பகுதியில், 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட செங்குன்றம் புறவழிச்சாலை - வடகரை சந்திப்பில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறையின் மற்றொரு தரை மட்ட பாலம், 500 அடி நீளம் கொண்டது. அதிலும், இதுவரை விளக்குகள் அமைக்கப்படவில்லை. அந்த பாலமும் இருளில் மூழ்கி கிடக்கிறது.

இதனால், போக்குவரத்து மிகுந்த செங்குன்றம் புறவழிச்சாலை - வடகரை சாலை சந்திப்பு மற்றும் ஜி.என்.டி., சாலை சந்திப்புகளில், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். மழை காலத்தில் நிலைமை மேலும் மோசமாகிறது.இது தவிர, அந்த பாலத்தின் இரு பக்கமும் உள்ள நடைமேடையில் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்தும், குப்பை கழிவுகள் குவிந்தும் பாதசாரிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

மேற்கண்ட பாலங்களில், மாநில நெடுஞ்சாலைத்துறையும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும், சாலை விளக்கு வசதியை அமைத்து, விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X