பல்கலை இணைப்பு விவகாரம்: அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்| Dinamalar

தமிழ்நாடு

பல்கலை இணைப்பு விவகாரம்: அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

Added : செப் 01, 2021
Share
-நமது நிருபர் குழு-ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை, அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பதற்கான மசோதா, தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்து, தர்ணாவில் ஈடுபட்டனர்.இந்நிலையில், நேற்று பல்வேறு பகுதிகளில், அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அன்னுார், பயணியர் மாளிகை முன்பு, அ.தி.மு.க., வினர் நேற்று மாலை
 பல்கலை இணைப்பு விவகாரம்: அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

-நமது நிருபர் குழு-

ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை, அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பதற்கான மசோதா, தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்து, தர்ணாவில் ஈடுபட்டனர்.இந்நிலையில், நேற்று பல்வேறு பகுதிகளில், அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அன்னுார், பயணியர் மாளிகை முன்பு, அ.தி.மு.க., வினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக அரசைக் கண்டித்து, கோஷம் எழுப்பப்பட்டது. திட்டமிட்டு ஜெ.வின் பெயரையும், புகழையும் மறைக்க, பல்கலைக்கழக இணைப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதாக, குற்றம் சாட்டினர். ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் அம்பாள் பழனிசாமி, சாய் செந்தில், நகரச் செயலாளர் சவுக்கத்அலி, பாசறை மாவட்ட செயலாளர் வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* கோவில்பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன்பு எஸ்.எஸ்.குளம் (கிழக்கு-, மேற்கு) ஒன்றியங்கள் மற்றும் நகர கழகம் சார்பில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியம், சுகுமார், நகரச் செயலாளர் தேவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.* மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராஜ், மாவட்ட கவுன்சிலர்கந்தசாமி, காரமடை ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், காரமடை பேரூராட்சி செயலாளர் ஆறுமுகசாமி, ஊராட்சி தலைவர் விமலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* சூலுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் அசோகன், ஒன்றிய செயலாளர்கள் கந்தவேல், குமரவேல் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.சமூகஇடைவெளி?ஆர்ப்பாட்டங்களின்போது, அ.தி.மு.க.,வினர், கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சம் ஏதுமின்றி, சமூக இடைவெளியை மறந்து, நெருக்கியடித்து நின்று, கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X