பொது செய்தி

தமிழ்நாடு

புனரமைத்து ஆறே மாதமான சாலையில் பணி; மின் வாரியத்தால் மக்கள் வரிப்பணம் வீண்

Added : செப் 01, 2021
Share
Advertisement
வேளச்சேரி : வேளச்சேரியில், புனரமைத்து ஆறே மாதமான சாலையில், மின் 'கேபிள்' பதிக்க, 3 அடி அகலத்தில் பள்ளம் தோண்டப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த மக்கள், வரிப்பணத்தை எப்படியெல்லாம் வீணடிக்கின்றனர் என, அங்கலாயித்தனர்.அடையாறு மண்டலம், 177வது வார்டு, ஏரிக்கரை சாலை, 40 அடி அகலம் உடையது. இதில், ஆறு மாதத்திற்குமுன் சாலை புனரமைக்கப்பட்டது. ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகர் பிரதான

வேளச்சேரி : வேளச்சேரியில், புனரமைத்து ஆறே மாதமான சாலையில், மின் 'கேபிள்' பதிக்க, 3 அடி அகலத்தில் பள்ளம் தோண்டப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த மக்கள், வரிப்பணத்தை எப்படியெல்லாம் வீணடிக்கின்றனர் என, அங்கலாயித்தனர்.

அடையாறு மண்டலம், 177வது வார்டு, ஏரிக்கரை சாலை, 40 அடி அகலம் உடையது. இதில், ஆறு மாதத்திற்குமுன் சாலை புனரமைக்கப்பட்டது. ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகர் பிரதான சாலை, இந்த சாலையின் தொடர்ச்சியாக உள்ளது. இதில் ஓராண்டுக்கு முன் 'சிமென்ட்' சாலை போடப்பட்டது.

இந்நிலையில், இந்த இரு சாலைகளிலும் மின் கேபிள் பதிக்க, 3 அடி அகலத்தில் பள்ளம் தோண்டப்படுகிறது. கேபிள் பதிக்க, ஒன்றரை ஆண்டுக்குமுன் ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளது.ஆனால், துறைகள் ஒருங்கிணைப்பு இல்லாததால், சாலை புனரமைத்த ஆறே மாதத்தில் பள்ளம் தோண்டியதால், சாலை பழுதடையும் அவலம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டுள்ளது.

கடந்த, ஏழு மாதத்திற்கு முன், இதே சாலையின் ஒரு பக்கத்தில் மழை நீர் வடிகால் கட்டப்பட்டது. அப்போது, அதை ஒட்டி மின் கேபிள் பதிக்கப்பட்டது.அப்போதே, இரண்டு பக்கத்திலும் மின் கேபிள்கள் பதிக்கப்பட்டிருந்தால், சாலையை மீண்டும் தோண்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. பருவ மழை துவங்கும் நேரத்தில், பள்ளம் தோண்டியதால், போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறிவிடும் என, பகுதிமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மின் கேபிள் பதிக்க ஒப்பந்தம் விடும்போதே, சாலையின் தன்மை குறித்து எங்களிடம் விசாரிக்க வேண்டும். மின் வாரியம் எதுவும் விசாரிப்பதில்லை.புது சாலை போட்ட ஓராண்டுக்குள், பணி துவங்க அனுமதி மறுத்தால், மின் வாரிய உயர் அதிகாரிகள், மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் பேசி அனுமதி வழங்க வலியுறுத்துகின்றனர். பகுதிமக்கள், சாலை துண்டிப்பு குறித்து எங்களிடம் கேள்வி கேட்கின்றனர். ஏரியை ஒட்டிய சாலையானதால், பருவ மழையின்போது பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X