சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை தரம் உயர்த்த முதற்கட்ட பணிகள் தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை தரம் உயர்த்த முதற்கட்ட பணிகள் தீவிரம்

Added : செப் 01, 2021
Share
சென்னை : சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையை தரம் உயர்த்த, முதற்கட்டமாக டயாலிசிஸ் மற்றும் அறுவை சிகிச்சை வசதி செய்யப்பட உள்ளது.சைதாப்பேட்டை, அரசு பொது மருத்துவமனை, 1920ம் ஆண்டு துவங்கப்பட்டது. சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, அடையாறு, சோழிங்கநல்லுார், நீலாங்கரை, போரூர், ஆலந்துார் சுற்றுவட்டார மக்கள், இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், ராயப்பேட்டை,

சென்னை : சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையை தரம் உயர்த்த, முதற்கட்டமாக டயாலிசிஸ் மற்றும் அறுவை சிகிச்சை வசதி செய்யப்பட உள்ளது.

சைதாப்பேட்டை, அரசு பொது மருத்துவமனை, 1920ம் ஆண்டு துவங்கப்பட்டது. சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, அடையாறு, சோழிங்கநல்லுார், நீலாங்கரை, போரூர், ஆலந்துார் சுற்றுவட்டார மக்கள், இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், ராயப்பேட்டை, ராஜிவ் காந்தி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்கு செல்லும் முன், விபத்து, தீக்காயம் உள்ளிட்ட அவசர சிகிச்சைக்காக, முதலுதவி சிகிச்சையும் இங்கு அளிக்கப்படும்.

இந்த, மருத்துவமனையில் வசதிகளை அதிகரித்து, தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, டயாலிசிஸ் மற்றும் அறுவை சிகிச்சை வசதி செய்யப்பட உள்ளது.அதோடு, 40 கிலோ 'வாட்' திறனுடன் கூடிய, 'ஜெனரேட்டர்' வசதியும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடக்கின்றன. தற்போது, தரை சீரமைப்பு பணி நடக்கிறது.இரண்டு மாதத்தில், தரம் உயர்த்துவதற்கான, முதற்கட்ட வசதிகள் துவக்கப்பட உள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X