சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருடர்கள் கைது

Added : செப் 01, 2021
Share
Advertisement
கோடம்பாக்கம் : கோடம்பாக்கம் மற்றும் வடபழநி காவல் நிலைய எல்லையில், ஆக., 24ம் தேதி இரவு, கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டனர்.இது குறித்து, கோடம்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில், கோடம்பாக்கம் வரதராஜபேட்டை - ஆற்காடு சாலையில், நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த

கோடம்பாக்கம் : கோடம்பாக்கம் மற்றும் வடபழநி காவல் நிலைய எல்லையில், ஆக., 24ம் தேதி இரவு, கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டனர்.இது குறித்து, கோடம்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில், கோடம்பாக்கம் வரதராஜபேட்டை - ஆற்காடு சாலையில், நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த இருவரை மடக்கி விசாரித்தனர். விசாரணையில், புளியந்தோப்பை சேர்ந்த விஜய், 26, திருவள்ளூரை சேர்ந்த சூரியபிரகாஷ், 21, என தெரிய வந்தது.

இவர்கள், டிரஸ்ட் புரத்தில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 1.5 கிலோ வெள்ளி பொருட்கள், டிவி, 10 மொபைல் போன்கள், கேமரா, மடிக்கணினி, குபேர, பெருமாள் பொம்மைகள், ஏழு பித்தளை பரிசு சிலைகள், மளிகை மற்றும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X