பொது செய்தி

தமிழ்நாடு

போரூர் ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
போரூர் : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, போரூரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு வந்த குடிசை அகற்றப்பட்டது.போரூர் ஏரியில் 18 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த ஆக்கிரமிப்புகள், நீதிமன்ற உத்தரவின்படி, 2006ம் ஆண்டு அகற்றப்பட்டன. அங்கு குடியிருந்தோருக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது.ஆனால் சில ஆண்டுகளில் ஏரிக்குள்ளேயே பல நகர்கள் உருவாகி விட்டன. இதில், அய்யப்பன்தாங்கல், கொளுத்துவாஞ்சேரி

போரூர் : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, போரூரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு வந்த குடிசை அகற்றப்பட்டது.

போரூர் ஏரியில் 18 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த ஆக்கிரமிப்புகள், நீதிமன்ற உத்தரவின்படி, 2006ம் ஆண்டு அகற்றப்பட்டன. அங்கு குடியிருந்தோருக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது.ஆனால் சில ஆண்டுகளில் ஏரிக்குள்ளேயே பல நகர்கள் உருவாகி விட்டன. இதில், அய்யப்பன்தாங்கல், கொளுத்துவாஞ்சேரி கிராமம், ஏரியின் உள்வாய் பகுதியில் பல வீடுகள் முளைத்து விட்டன.

இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்நிலையில், மீண்டும் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு குடிசைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக, நேற்று முன்தினம் படத்துடன் நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, நேற்று அப்பகுதியை ஆய்வு செய்த பொதுப்பணி துறை அதிகாரிகள், போலீசார் உதவியுடன், உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X