பொது செய்தி

இந்தியா

மழைக்கால கூட்டத்தொடரில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க உத்தரவு

Added : செப் 01, 2021
Share
Advertisement
பெங்களூரு : 'கர்நாடகாவில் வரும் 13லிருந்து துவங்கும் சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் அனைத்து அமைச்சர்களும் சட்டசபையில் பங்கேற்க செய்ய வேண்டும்' என, சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, முதல்வர் பசவராஜ் பொம்மை, சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.மழைக்கால கூட்டத்தொடர் சட்டசபை கூட்டத்தொடரில் விவாதங்களின் போது,

பெங்களூரு : 'கர்நாடகாவில் வரும் 13லிருந்து துவங்கும் சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் அனைத்து அமைச்சர்களும் சட்டசபையில் பங்கேற்க செய்ய வேண்டும்' என, சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, முதல்வர் பசவராஜ் பொம்மை, சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.

மழைக்கால கூட்டத்தொடர் சட்டசபை கூட்டத்தொடரில் விவாதங்களின் போது, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பெரும்பாலோனோர் இருப்பதில்லை. அவர்களுக்கு பதிலாக சட்டத்துறை அமைச்சர் பதிலளிப்பர்.வரும், 13லிருந்து, 24 வரை, பத்து நாட்களுக்கு, மழைக்கால கூட்டத்தொடர் துவங்க உள்ளது.கடிதம் இந்நிலையில், கூட்டத்தொடர் முழுதும் அனைத்து அமைச்சர்களும் சட்டசபையில் இருக்க வேண்டும் என்று சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, முதல்வர் பசவராஜ் பொம்மை, சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:சட்டசபை உறுப்பினர்கள் பொது மக்கள் தொடர்புடைய முக்கிய கேள்விகள் கேட்கும் போது, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டும்.அந்த நேரத்தில் அவர்கள் இல்லை என்றால், சரியான பதிலும் வராது; அவை அங்கீகரிக்கவும் முடியாது.அமைச்சர்கள் இல்லாமை என்பது, ஆளுங்கட்சி தரப்பிலிருந்து பதில் பெற முடியாமல் உறுப்பினர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர்.எனவே கூட்டத்தொடரின் போது அமைச்சர்கள் கட்டாயம் இருக்கும்படி, இருவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது போல, அனைத்து அமைச்சர்களுக்கும் தனித்தனியாக கடிதம் எழுதி, தொகுதியில் பணியிருப்பதால், கூட்டத்தொடரில் பங்கேற்பதிலிருந்து யாரும் விலக்கு கேட்க வேண்டாம் என்று சபாநாயகர் உறுதிபட தெரிவித்துள்ளார்.உத்தரவுஅனைத்து துறை உயர் அதிகாரிகளும் கட்டாயமாக கூட்டத்தொடரில் ஆஜராகியிருக்க வேண்டும் என்று துறை முக்கியஸ்தர்களுக்கு உத்தரவிடும்படி, சட்டசபை செயலர் விசாலாட்சிக்கு சபாநாயகர் அறிவுறுத்திஉள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X