பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் நிறுவன உதவியில் பசுமைவெளியான மயான பூமி

Added : செப் 01, 2021
Share
Advertisement
ராமாபுரம் : ராமாபுரம் மயான பூமி அருகே உள்ள குப்பை மேடு பகுதியை, தனியார் நிறுவன நிதி உதவியுடன், பசுமை பகுதியாக மாநகராட்சி அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.வளசரவாக்கம் மண்டலம் 155வது வார்டு, ராமாபுரம் மயான பூமி அருகே காலி இடம் இருந்தது. இந்த இடம் அடையாறுக்கு செல்லும் நந்தம்பாக்கம் கால்வாய் அருகே உள்ளது.இந்நிலையில், கேட்பாரற்று கிடந்த இடத்தை, ராமாபுரத்தில் உள்ள தனியார்

ராமாபுரம் : ராமாபுரம் மயான பூமி அருகே உள்ள குப்பை மேடு பகுதியை, தனியார் நிறுவன நிதி உதவியுடன், பசுமை பகுதியாக மாநகராட்சி அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.

வளசரவாக்கம் மண்டலம் 155வது வார்டு, ராமாபுரம் மயான பூமி அருகே காலி இடம் இருந்தது. இந்த இடம் அடையாறுக்கு செல்லும் நந்தம்பாக்கம் கால்வாய் அருகே உள்ளது.இந்நிலையில், கேட்பாரற்று கிடந்த இடத்தை, ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லுாரி நிதி உதவியுடன், அழகான பசுமைப்பகுதியாக மாநகராட்சி அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.இங்கு, பலவகை பூச்செடிகள் மற்றும் மரங்கள் நடப்பட்டு, வேலி அமைக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சுவர்களில் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.

இதையடுத்து, குப்பை மேடாக இருந்த பகுதி, மக்களின் கண்ணை கவரும் பசுமை பகுதியாக மாறி உள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதைபோல், ஆக்கிரமிப்பில் உள்ள சாலையோர பகுதிகளை பசுமை பகுதியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X