புத்தகங்களுக்கு தட்டுப்பாடு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புத்தகங்களுக்கு தட்டுப்பாடு

Added : செப் 01, 2021
Share
பெங்களூரு : பி.யு.சி., முதலாண்டு மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதால் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பால், நடப்பாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.இதனால், நடப்பு கல்வியாண்டில் பி.யு.சி., மாணவர் சேர்க்கை, கடந்த கல்வியாண்டை விடவும் அதிகரித்துள்ளது.நடப்பு கல்வியாண்டுக்கான புத்தகங்கள், பாடப்புத்தக

பெங்களூரு : பி.யு.சி., முதலாண்டு மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதால் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால், நடப்பாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.இதனால், நடப்பு கல்வியாண்டில் பி.யு.சி., மாணவர் சேர்க்கை, கடந்த கல்வியாண்டை விடவும் அதிகரித்துள்ளது.நடப்பு கல்வியாண்டுக்கான புத்தகங்கள், பாடப்புத்தக கழகத்தின் சார்பில் குறிப்பிட்ட அளவு மட்டுமே கடந்தாண்டு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வகுப்புகள் துவங்கியும் மாணவர்கள் புத்தகங்கள் இன்றி சிரமப்படுகின்றனர்.மாநில பாட அட்டவணையில் தான் மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் புத்தகங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்படவில்லை. ஆனால், மாநில பாடநுால் கழக புத்தகங்களின் விலையை விட, இந்த புத்தகங்கள் கூடுதல் தொகையாக இருப்பதால் மாணவர்களால் வாங்க முடிவதில்லை.

குறிப்பாக கணிதம், உயிரியியல், இயற்பியல், வேதியியல் புத்தகங்கள் அதிகம் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. பி.யு.சி., கல்வி துறை இயக்குனர் ஸ்னேகல் கூறியதாவது:கூடுதல் புத்தகங்கள் அச்சடிப்பதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் நடக்கின்றன. மூன்று வாரத்துக்குள் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் கிடைக்கும். மேலும் அரசு புத்தக கடைகளில் பாடநுால் கழக புத்தகங்கள் கிடைக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X