பொது செய்தி

தமிழ்நாடு

இறுதிச் சடங்குக்கு பணமில்லை :கலங்கியவருக்கு போலீசார் உதவி

Added : செப் 01, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் அருகே,தன் மனைவியின்இறுதிச் சடங்குக்கு பணம் இன்றித் தவித்த, ஏழைக்கு, போலீசார் உதவிக்கரம் நீட்டியது, அனைவரையும் நெகிழச்செய்துள்ளது.பதுவம்பள்ளியைச் சேர்ந்த, 50 வயது ஏழைப் பெண் கடும் உடல் நலக் குறைவு காரணமாக, அன்னுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர், நேற்று இறந்தார்.அங்கிருந்த அந்தப் பெண்ணின் கணவர், தனது மனைவியின் உடலை, அன்னுாரில்

அன்னுார்:அன்னுார் அருகே,தன் மனைவியின்இறுதிச் சடங்குக்கு பணம் இன்றித் தவித்த, ஏழைக்கு, போலீசார் உதவிக்கரம் நீட்டியது, அனைவரையும் நெகிழச்செய்துள்ளது.பதுவம்பள்ளியைச் சேர்ந்த, 50 வயது ஏழைப் பெண் கடும் உடல் நலக் குறைவு காரணமாக, அன்னுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர், நேற்று இறந்தார்.அங்கிருந்த அந்தப் பெண்ணின் கணவர், தனது மனைவியின் உடலை, அன்னுாரில் இருந்து, பதுவம்பள்ளிக்கு கொண்டுசெல்வதற்கும், இறுதிச்சடங்கு செய்வதற்குக் கூட பணம் இன்றி, கண்ணீர் மல்க தவித்தார்.அவரின் கையறு நிலையை உணர்ந்த, அன்னுார் போலீசார், உடனடியாக உதவ முன்வந்தனர்.ஆம்புலன்ஸ் மூலம் பதுவம்பள்ளிக்கு அந்தப் பெண்ணின் உடலை இலவசமாக கொண்டு செல்வதற்கும், இறுதிச் சடங்குக்கும் ஏற்பாடு செய்தனர்.இறுதிச் சடங்கு செய்வதற்கு பண உதவியும் செய்தனர். இறந்த பெண்ணின் குடும்பத்தார், போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர். போலீசாரின் மனிதாபிமான உதவி, அங்கிருந்தோரை நெகிழச் செய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X