பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது: கலெக்டர் தகவல்

Added : செப் 01, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 9,980 கோவிஷீல்டு, 4,400 கோவாக்சின் தடுப்பூசி தற்போது கையிருப்பில் உள்ளது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தியுள்ளார்.அவரது செய்திகுறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 9,980 கோவிஷீல்டு, 4,400 கோவாக்சின் தடுப்பூசி தற்போது கையிருப்பில் உள்ளது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தியுள்ளார்.

அவரது செய்திகுறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகள், கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

அதேபோல், கர்ப்பிணிகளுக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இன்று 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், முதல் தவணை 3 லட்சத்து 77 ஆயிரத்து 429 பேருக்கும், இரண்டாம் தவணை 69 ஆயிரத்து 354 பேருக்கு என மொத்தம் 4 லட்சத்து 46 ஆயிரத்து 783 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.தற்போது, மாவட்டத்தில் கோவிஷீல்டு 9,980, கோவாக்சின் 4,400 டோஸ் கையிருப்பில் உள்ளது. எனவே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X