பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடைகளுக்கு தேவையான தாது உப்பு! குறைபாடுகளை தவிர்க்க வழிகாட்டுதல்

Added : செப் 01, 2021
Share
Advertisement
உடுமலை;'கால்நடைகளுக்கு, தாது உப்பு மற்றும் வைட்டமின்களால், ஏற்படும் குறைபாடுகளை தவிர்க்க, அகத்தி உட்பட பசுந்தழைகளை தீவனமாக அளிக்கலாம்,' என கால்நடைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், பால் உற்பத்திக்காக, அதிகளவு மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. இவ்வாறு, பராமரிக்கப்படும் மாடுகளில், நோய்த்தாக்குதல் மற்றும் பல்வேறு குறைபாடுகளால், பால்

உடுமலை;'கால்நடைகளுக்கு, தாது உப்பு மற்றும் வைட்டமின்களால், ஏற்படும் குறைபாடுகளை தவிர்க்க, அகத்தி உட்பட பசுந்தழைகளை தீவனமாக அளிக்கலாம்,' என கால்நடைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், பால் உற்பத்திக்காக, அதிகளவு மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. இவ்வாறு, பராமரிக்கப்படும் மாடுகளில், நோய்த்தாக்குதல் மற்றும் பல்வேறு குறைபாடுகளால், பால் உற்பத்தி குறைவதுடன், சில நேரங்களில், உயிரிழப்பும் ஏற்படுகிறது.எனவே, கால்நடைகளுக்கு தீவன மேலாண்மை முக்கியமானதாக உள்ளது. கால்நடை தீவனத்தில், மாவுச்சத்து, புரதம் மற்றும் கொழுப்பு சத்து மூன்றும் இருப்பது போல, தாது உப்புகளும் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டியது அவசியமாகிறது.கால்நடைத்துறையினர் கூறியதாவது: கால்நடைகளுக்கு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய இரண்டுமே அதிகளவில், தேவைப்படும் தாது உப்புகளாகும். கால்சியம் சத்து குறைவால், 'பால் சுரம்', எனும் நோயும், பாஸ்பரஸ் குறைவு காரணமாக, காகிதம் போன்றவற்றை உண்ணக்கூடிய, 'பைகா' நோயும் கால்நடைகளில், ஏற்படுகிறது.கால்நடை தீவனத்தில், தாது உப்புகள் மிக குறைந்த அளவே தேவைப்பட்டாலும், அவற்றின் குறைபாடுகள், பலவித நோய்களை ஏற்படுத்துகின்றன. எனவே, தாது உப்புகள், தேவையான, குறிப்பிட்ட அளவுகளில், தீவனங்களில் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.இந்த தாது உப்புகளை, அடர் தீவனத்துடன், சேர்த்து வழங்கலாம்; தாது உப்புகள் நிறைந்த பசுந்தீவனங்களை உபயோகிப்பதாலும், அவற்றின் குறைபாடுகள் வராமல் தடுக்கலாம்.வளர்ச்சியடைந்த மாடுகளுக்கு, தினசரி, 30 கிராம்; ஆடுகளுக்கு, 5 கிராம் அளவு வழங்கலாம். கிராமங்களில் தாராளமாக கிடைக்கும், அகத்திக்கீரை, சூபாபுல், கல்யாண முருங்கை போன்றவைகளின் தாது உப்புகள் நிறைந்துள்ளன.இத்தகைய பசுந்தீவன மரங்களையோ, காரமணி போன்ற தாவரங்களையோ வளர்த்து, அதன் பசுந்தழைகளை, தீவனமாக பயன்படுத்தலாம். இதனால், கால்நடைகளில் தாது உப்புகள் மற்றும் வைட்டமின்களால் ஏற்படும் குறைபாடுகளை தவிர்க்கலாம்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X