தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார்! 3,162 ஊராட்சி வார்டுகளுக்கு கலெக்டர் வெளியிட்டார்

Added : செப் 01, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3,162 கிராம ஊராட்சி வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஸ்ரீதர் நேற்று வெளியிட்டார்.தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. புதிதாக பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி : ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3,162 கிராம ஊராட்சி வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஸ்ரீதர் நேற்று வெளியிட்டார்.

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. புதிதாக பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், செங்கல்பட்டு உட்பட 9 மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை செய்யப்படாததால் தேர்தல் நடத்தவில்லை.தற்போது இம்மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பூர்வாங்க பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அதன்படி வாக்காளர் பட்டியல் மற்றும் ஓட்டுச் சாவடிகளை உருவாக்குவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.இதையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகைப்படத்தோடு கூடிய வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதில், மாவட்டத்தில் ஊரக பகுதிகளான கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், கல்வராயன்மலை, தியாகதுருகம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை, திருநாவலுார், திருக்கோவிலுார் என 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 412 ஊராட்சிகளில் உள்ள 3,162 கிராம ஊராட்சி வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில், ஆண் வாக்காளர்கள் 4 லட்சத்து 83 ஆயிரத்து 772 பேர், பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 77 ஆயிரத்து 812 பேர், மூன்றாம் பாலினத்தவர் 186 பேர் என மொத்தம் 9 லட்சத்து 61 ஆயிரத்து 770 வாக்காளர்கள் உள்ளனர்.ஊராட்சிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர், பி.டி.ஓ.,க்கள் மூலம் நேற்று வெளியிடப்பட்டு, வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்காளர் பட்டியல்களை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்குச் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மணி பெற்றுக்கொண்டார். டி.ஆர்.ஓ., விஜய்பாபு, கலெக்டர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குமாரி, அலுவலக மேலாளர் (வளர்ச்சி) ராஜேந்திரன் உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X