பொது செய்தி

இந்தியா

ம.ஜ.த.,வுடன் கூட்டணி கிடையாது

Added : செப் 01, 2021
Share
Advertisement
மைசூரு : ''அடுத்த சட்டசபை தேர்தலில் ம.ஜ.த.,வுடன் கூட்டணி வைத்து கொள்ள மாட்டோம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ மற்ற கட்சிகளுடன் இணைய மாட்டோம்,'' என பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அருண் சிங், மைசூரில் நேற்று தெரிவித்தார்.அடுத்த சட்டசபை தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் வகையில் பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அருண்சிங் நேற்று முன்தினம் டில்லியிலிருந்து பெங்களூரு வந்தார்.காலையில் மைசூரு
ம.ஜ.த.,வுடன் கூட்டணி கிடையாது

மைசூரு : ''அடுத்த சட்டசபை தேர்தலில் ம.ஜ.த.,வுடன் கூட்டணி வைத்து கொள்ள மாட்டோம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ மற்ற கட்சிகளுடன் இணைய மாட்டோம்,'' என பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அருண் சிங், மைசூரில் நேற்று தெரிவித்தார்.

அடுத்த சட்டசபை தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் வகையில் பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அருண்சிங் நேற்று முன்தினம் டில்லியிலிருந்து பெங்களூரு வந்தார்.காலையில் மைசூரு சாமுண்டீஸ்வரி தேவியை தரிசனம் செய்தார். பின், மைசூரு நகரம், மைசூரு ரூரல், சாம்ராஜ்நகர் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.பின், அவர் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் எடியூரப்பா எங்கள் கட்சியின் பெரிய தலைவர். அவரது அனுபவத்தை பயன்படுத்தி கட்சி பலப்படுத்தப்படும். பழைய மைசூரு மண்டலத்தில் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக உள்ளோம். முதல்வர் பசவராஜ் பொம்மை ஒரு மாதத்திலேயே சிறப்பாக செயல்படுகிறார்.மாநில அரசில் எந்த வித குழப்பமும் இல்லை. துறைகள் ஒதுக்குவதில் கட்சி மேலிடம் தலையிடவில்லை.

முதல்வரின் பரம அதிகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம்.அனைத்து அமைச்சர்களும் அவரவர் துறைகளில் சிறப்பாக செயல்படுகின்றனர். கர்நாடகாவில், ம.ஜ.த., காங்கிரஸ் ஆட்சி எப்படி இருந்தது என்பதை மக்கள் அறிவர்.பா.ஜ., என்றுமே வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கொள்ளவில்லை. அடுத்த தேர்தலில் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். இதற்கான திசையை நோக்கி கட்சி வளர்க்கிறோம்.சட்டசபை தேர்தலில் ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைத்து கொள்ள மாட்டோம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ மற்ற கட்சிகளுடன் இணைய மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X