சம்பவம் செய்தி

தமிழ்நாடு

6 இடங்களில் சாலை மறியல்டூ மாஜி எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 290 பேர் கைது

Added : செப் 01, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட மாஜி எம்.எல்.ஏ.,க்கள் உட்பட அ.தி.மு.க.,வினர் 290 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரத்தில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை, தி.மு.க., அரசு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைப்பதற்கான மசோதவை, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தது.இதை கண்டித்து,

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட மாஜி எம்.எல்.ஏ.,க்கள் உட்பட அ.தி.மு.க.,வினர் 290 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரத்தில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை, தி.மு.க., அரசு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைப்பதற்கான மசோதவை, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தது.இதை கண்டித்து, உளுந்துார்பேட்டை விருத்தாசலம் சாலை சந்திப்பில் நேற்று மதியம் 12:00 மணியளவில் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ., குமரகுரு தலைமையிலும், 2:00 மணியளவில் திருநாவலுார் ஒன்றிய செயலாளர் செண்பகவேல் தலைமையிலும் சாலை மறியல் செய்தனர்.

தியாகதுருகத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு தலைமையில், அண்ணா சிலை அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர்.மேலும், சங்கராபுரம், மணலுார்பேட்டை, சின்னசேலம் உள்ளிட்ட 5 இடங்களில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் குமரகுரு, பிரபு உட்பட 290 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சியில் நகர செயலாளர் பாபு தலைமையிலும், திருக்கோவிலுாரில் ஒன்றிய செயலாளர் பழனி தலைமையிலும், சின்னசேலத்தில் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X