விற்பனையாகாமல் தேங்காய்கள் தேக்கம்: ரேஷனில் எண்ணெய் விற்பனைக்கு கோரிக்கை

Added : செப் 01, 2021
Advertisement
நெகமம்;தேங்காய், கொப்பரை விற்பனையாகாமல், இரண்டு மாதங்களுக்கு மேலாக, தேங்கி கிடப்பதால், விவசாயிகள், கொப்பரை உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்தனர்.நெகமம், கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் தென்னை சாகுபடி அதிகம் உள்ளதால், கொப்பரை உற்பத்தியும் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த ஆண்டும், நடப்பு ஆண்டும், தேங்காய் சீசன் துவங்கிய காலத்தில், தேங்காய் விற்பனை செய்ய

நெகமம்;தேங்காய், கொப்பரை விற்பனையாகாமல், இரண்டு மாதங்களுக்கு மேலாக, தேங்கி கிடப்பதால், விவசாயிகள், கொப்பரை உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்தனர்.நெகமம், கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் தென்னை சாகுபடி அதிகம் உள்ளதால், கொப்பரை உற்பத்தியும் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த ஆண்டும், நடப்பு ஆண்டும், தேங்காய் சீசன் துவங்கிய காலத்தில், தேங்காய் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.தேங்காய் மட்டுமின்றி, உற்பத்தி செய்த கொப்பரையும் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. விலையும் உயராமல் தொடர்ந்து சரிந்து வருகிறது.நேற்றைய காங்கேயம் மார்க்கெட் நிலவரப்படி, ஸ்பெஷல் ரக கொப்பரை கிலோ - 102 ரூபாய், சாதாரண ரக கொப்பரை - 98 ரூபாய்க்கும் விற்பனையானது. தேங்காய் பவுடர் கிலோ - 150, 15 கிலோ ஆயில் - 2,250; ஒருடன் பச்சை தேங்காய் - 28,500, கருப்பு ரக தேங்காய் - 31 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது. விவசாயி தங்கவேலு கூறியதாவது:தென்னை விவசாயிகளை, அ.தி.மு.க., அரசும், தி.மு.க., அரசும் கைவிட்டு விட்டன. தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, தேங்காய் மற்றும் கொப்பரைக்கு விலை கிடைப்பதில்லை. மத்திய அரசு கொப்பரை கிலோவுக்கு, 103.35 ரூபாய் விலை நிர்ணயித்துள்ளது. தென்னை விவசாயிகளை காப்பாற்ற, தமிழக அரசும் தன் பங்குக்கு கூடுதலாக, 10 ரூபாய் சேர்த்து வழங்க வேண்டும்.கேரள அரசை போல, தமிழக அரசும் தென்னை சாகுபடியாளர்கள் மற்றும் கொப்பரை உற்பத்தியாளர்களிடம் இருந்து, கொப்பரை கொள்முதல் செய்து, அரசு அல்லது தனியார் ஆலைகளில் எண்ணெய் உற்பத்தி மேற்கொண்டு, பாமாயிலுக்கு மாற்றாக, ரேஷன்கடைகளில் தேங்காய் எண்ணெயை வினியோகம் செய்ய வேண்டும்.இதன்வாயிலாக, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்; பொதுமக்கள் பயனடைவர். எனவே, ரேஷன்கடைகளில் தேங்காய் எண்ணெய் விற் பனையை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அப்போது தான், விலை சரிவு ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியும், தேப்புகளில் தேக்கமடைந்துள்ள தேங்காய், கொப்பரை விற்பனையாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X