சித்தராமையாவுக்கு பா.ஜ., கேள்வி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சித்தராமையாவுக்கு பா.ஜ., கேள்வி

Added : செப் 01, 2021
Share
பெங்களூரு : ''காங்., மூத்த தலைவர் பரமேஸ்வரை, 2013 சட்டசபை தேர்தலில் தோற்கடித்தது, சித்தராமையா என, காங்கிரசார் குற்றம்சாட்டினர். இது உண்மையா,'' என பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது.இது குறித்து, டுவிட்டர் சமூக வலைதளத்தில் அவர் கூறியதாவது:நாங்கள் கேட்கும் கேள்விக்கு ஆமாம், இல்லை என ஒற்றை வார்த்தையில் சித்தராமையா பதிலளிக்க வேண்டும். 2013 சட்டசபை தேர்தலின் போது, மாநில காங்., தலைவர்

பெங்களூரு : ''காங்., மூத்த தலைவர் பரமேஸ்வரை, 2013 சட்டசபை தேர்தலில் தோற்கடித்தது, சித்தராமையா என, காங்கிரசார் குற்றம்சாட்டினர். இது உண்மையா,'' என பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து, டுவிட்டர் சமூக வலைதளத்தில் அவர் கூறியதாவது:நாங்கள் கேட்கும் கேள்விக்கு ஆமாம், இல்லை என ஒற்றை வார்த்தையில் சித்தராமையா பதிலளிக்க வேண்டும். 2013 சட்டசபை தேர்தலின் போது, மாநில காங்., தலைவர் தலைவராக இருந்த பரமேஸ்வரை தோற்கடித்ததே நீங்கள் தான் (சித்து) என காங்கிரசார் குற்றம் சாட்டினர். இது உண்மையா? ஒருவேளை பரமேஸ்வரை தோற்கடித்தது உண்மையானால், தலித் தலைவருக்கு அநியாயம் செய்ததாக ஆகிறது. தலித் முதல்வராகும் வாய்ப்புக்கு கொள்ளி வைத்தது போன்றதாகிறது. இதற்கு சித்தராமையா பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X