பொது செய்தி

இந்தியா

சீக்ரெட் சிங்காரம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
'மேடம் பர்த் டே!'மாண்டியா எம்.பி., சுமலதா மேடத்தோட 'பர்த் டே' பங்ஷனுக்கு நெறைய வி.ஐ.பி.,க்கள் ஒண்ணு கூடி கொண்டாட்டம் போட்டாங்களாம்.இந்த கொண்டாட்டத்தில ஸ்டேட் ஹெல்த் மினிஸ்டரும் கலந்துக்கிட்டாராம். சில பூக்காரங்க மேடத்துக்கு எதிர்ப்பா இருக்கிறாங்க; ஆனால், மினிஸ்டர் ரொம்பவே நெருக்கமா இருப்பதை வெளிப்படுத்தி இருக்காரு.ஜனங்க ஆசியால் மாண்டியா தமது கோட்டைன்னு மேடம்

'மேடம் பர்த் டே!'மாண்டியா எம்.பி., சுமலதா மேடத்தோட 'பர்த் டே' பங்ஷனுக்கு நெறைய வி.ஐ.பி.,க்கள் ஒண்ணு கூடி கொண்டாட்டம் போட்டாங்களாம்.

இந்த கொண்டாட்டத்தில ஸ்டேட் ஹெல்த் மினிஸ்டரும் கலந்துக்கிட்டாராம். சில பூக்காரங்க மேடத்துக்கு எதிர்ப்பா இருக்கிறாங்க; ஆனால், மினிஸ்டர் ரொம்பவே நெருக்கமா இருப்பதை வெளிப்படுத்தி இருக்காரு.ஜனங்க ஆசியால் மாண்டியா தமது கோட்டைன்னு மேடம் குஷி ஆயிட்டாங்களாம். இவரை பூக்கட்சியில் இழுக்கும் உள் வேலை நடக்குதாம்.'ஜாலி' ரெஸ்ட்டில் 'மாஜி' சி.எம்.,!கர்நாடகாவில் மூன்று மாநகராட்சி தேர்தல் நடக்கிறது.

பிரசாரம் அனல் பறக்குது. கட்சிகள் எல்லாம் பரபரப்பா சுழலுறாங்க. எப்படியாவது, மாநகராட்சியை கைப்பற்றணுமுன்னு மாநில கைக்கார தலைவரு ஒண்டியா துடிக்கிறாரு. இந்த நேரம் பார்த்து, 'மாஜி' முதல்வரு ஹாயா ரெஸ்ட்ல இருக்காரு.ஒரு வேளை மாநகராட்சியை கைப்பற்றாமல் போனால், அந்த பழியை மாநில கைக்கார தலைவரு மேலே போடலாம்னு 'மாஜி' முதல்வரு இயற்கை வைத்தியம் பாத்துக்கிறாராம்.

வாரி வழங்கும் வாக்குறுதி!கல்புர்கி மாநகராட்சி தேர்தலில் புல்லுக்கட்டுக்காரங்க வாக்குறுதிகளை வாரி வழங்குறாங்க. அது நடைமுறைக்கு வருமா, வராதான்னு ஜனங்க யோசிக்கிறாங்க.இங்கு 42வது வார்டுல மருத்துவ சலுகைகள், இன்சூரன்ஸ் வசதிகளை பிரசாரத்துக்கு தெரிவிச்ச வாக்குறுதியை தான் ஆளும் கட்சிக்காரங்க கிண்டலடிக்கிறாங்க. இவங்க வாக்குறுதிகளை சொல்லி வித்தை காட்றாங்களாம். கை காரங்க பெர்ர்ய தலைவரை நம்பி இருக்காங்க.காத்திருக்கு பெரிய சவால்!மூன்று மாநகராட்சிக்கு தேர்தல் நடக்கப் போகுது. இருந்தாலும், மாநிலத்தோட கேபிட்டல் சிட்டியின் கார்ப்பரேஷனுக்கு எப்போ தேர்தல் வருமோன்னு, போட்டிப்போட காத்திருப்பவர்கள் கலக்கத்தில் இருக்காங்க. ஓட்டுக்காக திட்டமிட்டு, ஏற்கனவே ஒரு ரவுண்டு செலவழித்து வருத்தத்தில் வலம் வராங்க.

சிலிகான் சிட்டி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட இட ஒதுக்கீடு கிடைக்குமா; கட்சியில் சீட் தருவரா; எத்தனை லட்சம் செலவழிக்கணுமுன்னு கணக்கு பார்த்து 'டயர்ட்' ஆகியிருக்காங்க. ஆளும் கட்சிக்கும், இரண்டு எதிர்க்கட்சிகளுக்கும் இத்தேர்தல் பெரிய சவாலாக இருக்குமாம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X