பொது செய்தி

இந்தியா

'ஹாக்ஸ் பில்' ஆமை இறப்பு

Added : செப் 01, 2021
Share
Advertisement
கார்வார் : பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் அரிய வகை 'ஹாக்ஸ் பில்' ஆமை, கார்வாரில் இறந்த நிலையில் கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.உத்தர கன்னடா மாவட்டம், கார்டார் தாலுகா, தீல்மாதி அரபி கடற்கரையில், ஹாக்ஸ் பில் என்ற அரிய வகை ஆமை இறந்த நிலையில் காணப்பட்டது.இதன் உடல் மீது புலி தோல் காணப்படுகிறது. இரண்டு நகங்கள், பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில்

கார்வார் : பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் அரிய வகை 'ஹாக்ஸ் பில்' ஆமை, கார்வாரில் இறந்த நிலையில் கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.உத்தர கன்னடா மாவட்டம், கார்டார் தாலுகா, தீல்மாதி அரபி கடற்கரையில், ஹாக்ஸ் பில் என்ற அரிய வகை ஆமை இறந்த நிலையில் காணப்பட்டது.இதன் உடல் மீது புலி தோல் காணப்படுகிறது.

இரண்டு நகங்கள், பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் தெரிகிறது.இந்த வகை அரிய ஆமைகள், கடற்கரையிலிருந்து கடலில் நீண்ட துாரம் செல்லக் கூடியது. 100 கிலோ வரை வளரக்கூடியது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முட்டைகள் இடுமாம்.கார்வாரில் முதல் முறையாக ஹாக்ஸ் பில் வகை ஆமை உடல் கிடைத்துள்ளது. வழக்கமாக, பசிபிக், அட்லாண்டிக் கடலிலும், அந்தமான், நிகோபர் பகுதியிலும் அதிக அளவிலும் காணப்படும்.இது குறித்து வனபாதுகாப்பு அதிகாரி வசந்த்ரெட்டி கூறுகையில், ''அரிய வகை ஆமை உடல் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பின், எப்படி இறந்தது என்பது தெரிய வரும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X