கிரைம் செய்திகள்...| Dinamalar

கிரைம் செய்திகள்...

Added : செப் 01, 2021
Share
பல்புகள் திருட்டு: மர்ம நபருக்கு வலைஉளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் சென்னை சாலையில் ஷானு பேக்கரி உள்ளது. நேற்று காலை கடை திறக்க வந்தபோது, கடையின் முன் பகுதியில் உள்ள 650 ரூபாய் மதிப்புள்ள எல்.இ.டி., பல்புகள் 2 மற்றும் ஒயர்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதேபோன்று, அருகே உள்ள ரியாஸ் என்பவரது மளிகைக் கடையில் இருந்த பல்பும் திருடு போனது. உளுந்துார்பேட்டை

பல்புகள் திருட்டு: மர்ம நபருக்கு வலை

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் சென்னை சாலையில் ஷானு பேக்கரி உள்ளது. நேற்று காலை கடை திறக்க வந்தபோது, கடையின் முன் பகுதியில் உள்ள 650 ரூபாய் மதிப்புள்ள எல்.இ.டி., பல்புகள் 2 மற்றும் ஒயர்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதேபோன்று, அருகே உள்ள ரியாஸ் என்பவரது மளிகைக் கடையில் இருந்த பல்பும் திருடு போனது. உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

குட்கா விற்றவர் கைது

விழுப்புரம்: தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சத்யா மற்றும் போலீசார் திருவாமாத்துாரில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்குள்ள மளிகைக் கடையில் குட்கா விற்ற முனுசாமி, 30; என்பவரை கைது செய்து, 211 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மனைவி மாயம்: கணவர் புகார்

விழுப்புரம்: அயினம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 44; கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சிதா, 34; இவர்களுக்கு கவிதா, 10; தாரணிகா, 6; என இரு மகள்கள் உள்ளனர். கடந்த 24ம் தேதி முதல் ரஞ்சிதா மகள்களுடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

சூதாடியவர் கைது: 6 பேருக்கு வலை

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அடுத்த திம்மிரெட்டிப்பாளையம் அருகே சப் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய திம்மிரெட்டிபாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 44; என்பவரை கைது செய்தனர். மேலும், அங்கிருந்த 4 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து தப்பியோடிய 6 பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X