பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதித்த விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை

Added : செப் 01, 2021
Share
Advertisement
பெங்களூரு : 'கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சிகளை துவங்குவதற்கு முன், பரிசோதனை செய்து கொள்வது அவசியம்' என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.கொரோனா இரண்டாம் அலைக்கு பின், பலரும் தங்களின் உடல்நலனை மேம்படுத்தி கொள்ள உடற்பயிற்சி மையங்களை நாடுகின்றனர். விளையாட்டு வீரர்களும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மீண்டுள்ளனர்.உடல் நலனை மேம்படுத்தும்

பெங்களூரு : 'கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சிகளை துவங்குவதற்கு முன், பரிசோதனை செய்து கொள்வது அவசியம்' என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலைக்கு பின், பலரும் தங்களின் உடல்நலனை மேம்படுத்தி கொள்ள உடற்பயிற்சி மையங்களை நாடுகின்றனர். விளையாட்டு வீரர்களும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மீண்டுள்ளனர்.உடல் நலனை மேம்படுத்தும் ஆர்வத்தில் அதிகமான பயிற்சிகளில் ஈடுபடுவதும், தங்களின் உடல் நிலை குறித்து தெளிவான புரிதல் இல்லாமல் கஷ்டப்படுத்தி கொள்வதும் மீண்டும் அபாயமான சூழலை ஏற்படுத்தி விடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

விளையாட்டு உடற் தகுதி தேர்வு மருத்துவர்கள் கூறியதாவது:விளையாட்டு ஆர்வலர்கள் பலவித பயிற்சிகளால் தங்களின் உடலை ஓரளவு கட்டுப்பாடுடன் வைத்திருந்தால், பாதிப்பிலிருந்து விரைவில் மீள முடிந்திருக்கும். நோயிலிருந்து மீண்டு வந்திருந்தாலும், அதன் தாக்கம் உடலின் சில பகுதிகளை பாதித்திருக்கும்.குறிப்பாக நுரையீரல், இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். இதை அறிந்து கொள்ளாமல், கொரோனா குணமடைந்தவுடன் பயிற்சிகளில் ஈடுபடுவது தவறான செயல். அதனால் பாதிப்பு மேலும் அதிகரித்து உடல்நிலையை சிக்கலாக்கி விடும்.

விளையாட்டு ஆர்வலர்கள், தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபடுவோர் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி. போன்ற பரிசோதனைகளை செய்துகொண்ட பின், பயிற்சிகளில் ஈடுபடலாம்.மேலும் ஒவ்வொரு கட்டமாக பயிற்சிகளை அதிகரிக்கலாம். ஒரே நேரத்தில் மிக கடுமையான பயிற்சிகளில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X