மாஜி அமைச்சர் கைதை கண்டித்து அ.தி.மு.க.,வினர் சாலை மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' அமைச்சர் கைதை கண்டித்து அ.தி.மு.க.,வினர் சாலை மறியல்

Added : செப் 01, 2021
Share
திண்டிவனம் : முன்னாள் அமைச்சர் சண்முகம் கைது செய்யப்பட்டதை கண்டித்து திண்டிவனத்தில் அ.தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்க சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனை கண்டித்து விழுப்புரத்தில் தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சண்முகம் கைது

திண்டிவனம் : முன்னாள் அமைச்சர் சண்முகம் கைது செய்யப்பட்டதை கண்டித்து திண்டிவனத்தில் அ.தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்க சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனை கண்டித்து விழுப்புரத்தில் தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சண்முகம் கைது செய்யப்பட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டிவனம், ஜக்காம்பேட்டை சந்திப்பில் நேற்று காலை 11:45 மணியளிவில், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முகமது ெஷரீப் தலைமையில் அ.தி.மு.க., வினர் சாலை மறியல் செய்தனர்.

மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன், ஒன்றிய நிர்வாகிகள் தீபம் குமார், ராமலிங்கம், மண்ணாங்கட்டி, மாணிக்கம், முருகன், குமார், ராஜா, பிரேம்குமார், தலைமைக்கழக பேச்சாளர் தம்பி ஏழுமலை, திண்டிவனம் நகர ஐ.டி., பிரிவு செயலாளர் தினேஷ், மண்டல தலைவர் காமேஷ், நிர்வாகிகள் கோகுல்ராஜ், சக்தி பெரியதம்பி, பாலாஜி, பழனிவேல்.

நகர இளைஞரணி செயலாளர் உதயகுமார், சிறுபான்மைப் பிரிவு செயலாளர் மஸ்தான், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில், வெற்றிவேல், நிர்வாகிகள் கீர்த்தீஸ்வரன், கார்த்தி, சுதர்சன், திலீப், லோகேஸ்வரன், கலைப்பிரியன், ஜனா உட்பட பலர் பங்கேற்றனர்.திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார், மறியல் செய்தவர்களை கைது செய்தனர். மறியலால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X