சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் காந்தி சிலை அருகே அ.தி.மு.க.,வினர் சாலை மறியல்

Added : செப் 01, 2021
Share
Advertisement
திண்டிவனம் : முன்னாள் அமைச்சர் சண்முகம் கைது செய்யப்பட்டதை கண்டித்து திண்டிவனத்தில் அ.தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தமிழக அரசு ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் கைது செய்யப்பட்டார்.இதை கண்டித்து, திண்டிவனம் காந்தி சிலை அருகே, அ.தி.மு.க., மாவட்ட

திண்டிவனம் : முன்னாள் அமைச்சர் சண்முகம் கைது செய்யப்பட்டதை கண்டித்து திண்டிவனத்தில் அ.தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் கைது செய்யப்பட்டார்.இதை கண்டித்து, திண்டிவனம் காந்தி சிலை அருகே, அ.தி.மு.க., மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் தலைமையில் நேற்று காலை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன், வழக்கறிஞர் ராமமூர்த்தி, நகர ஜெ.,பேரவை செயலாளர் ரூபன்ராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் விஜயகுமார், பாலச்சந்திரன், திருப்பதி சங்கர், விஸ்வநாதன், நட்ராஜ், முரளிதாஸ், ஸ்ரீதர், தீர்த்தகுளம் குமரன், சுரேஷ்.நகர இளைஞர் பாசறை செயலாளர் ஜெயவேல், நிர்வாகிகள் தினகரன், கார்த்தி, சீனு, கோபி, விக்னேஷ், குரு, அசோக்குமார், கலீல் பாஷா, கோபிநாத், ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.டவுன் டி.எஸ்.பி., (பொறுப்பு) உமாசங்கர் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X