மாணவர்கள் வருகை: பள்ளிகள் தயார்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் வருகை: பள்ளிகள் தயார்!

Added : செப் 01, 2021
Share
உடுமலை:மாணவர்கள் வருகையொட்டி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் தயார் நிலையில் இருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில், 9,10, 11 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல், நேரடி வகுப்புகள் துவங்குகின்றன. அதன்படி, 17 அரசு உயர்நிலை பள்ளிகள், 16 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 5 அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்பறையில், 20 மாணவர்கள் அமரும் வகையில், இருக்கைகள்
 மாணவர்கள் வருகை: பள்ளிகள் தயார்!

உடுமலை:மாணவர்கள் வருகையொட்டி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் தயார் நிலையில் இருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில், 9,10, 11 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல், நேரடி வகுப்புகள் துவங்குகின்றன. அதன்படி, 17 அரசு உயர்நிலை பள்ளிகள், 16 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 5 அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்பறையில், 20 மாணவர்கள் அமரும் வகையில், இருக்கைகள் போடப்பட்டுள்ளன.வகுப்பறைக்கு சமூக இடைவெளி விட்டு செல்வதற்காக, தரையில் வட்டம் போடப்பட்டுள்ளது. இதேபோல், 21 தனியார் மெட்ரிக் பள்ளிகள், 6 சுயநிதி பள்ளிகள் தயார் படுத்தப்பட்டுள்ளன.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, ஆசிரியர்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில், தினமும் வகுப்புகளும், அதிக எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில், ஒருநாள் விட்டு ஒருநாள் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X