யானையால் வீடு சேதம்; பழங்குடியினர் அச்சம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானையால் வீடு சேதம்; பழங்குடியினர் அச்சம்

Added : செப் 01, 2021
Share
கூடலுார்:கூடலுார், நாடுகாணி, தேவாலா பகுதிகளில் இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.அவை, நேற்று முன்தினம், பாண்டியார் டான்டீ தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்து, சில வீடுகளின் கதவுகளை சேதப்படுத்தின. வனத்துறையினர் வந்து யானைகளை விரட்டினர். நேற்று, காலை, நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்தில், முகாமிட்ட யானைகளை கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர்

கூடலுார்:கூடலுார், நாடுகாணி, தேவாலா பகுதிகளில் இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.அவை, நேற்று முன்தினம், பாண்டியார் டான்டீ தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்து, சில வீடுகளின் கதவுகளை சேதப்படுத்தின. வனத்துறையினர் வந்து யானைகளை விரட்டினர். நேற்று, காலை, நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்தில், முகாமிட்ட யானைகளை கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் விரட்டினர்.இந்நிலையில், மண்வயல் ஓடசொல்லி பழங்குடியினர் கிராமத்தில் நுழைந்த, மற்றொரு காட்டு யானை ஒன்று, வெள்ளச்சி, ஜார்ஜ் குட்டி ஆகியோர் வீடுகளை சேதப்படுத்தியது. வனத்துறையினர் ஆய்வு நடத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X