சர்வதேச செஸ் போட்டி: கோவை மாணவர் சாம்பியன்

Added : செப் 01, 2021
Share
Advertisement
கோவை:பிரான்ஸ் நாட்டில் நடந்த சர்வதேச அளவிலான செஸ் போட்டியில், 'இந்திய கிராண்ட் மாஸ்டர்' இனியன் சாம்பியன் பட்டம் வென்றார்.பிரான்ஸ் நோசியல் நகரில் சர்வதேச ஓபன் செஸ் போட்டி நடந்தது. ஒன்பது நாடுகளில் இருந்து, 50க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டியில் இந்தியாவின் சார்பில், கோவை தனியார் கலை அறிவியல் கல்லுாரியில் படிக்கும் இனியன், 18,
 சர்வதேச செஸ் போட்டி: கோவை  மாணவர் சாம்பியன்

கோவை:பிரான்ஸ் நாட்டில் நடந்த சர்வதேச அளவிலான செஸ் போட்டியில், 'இந்திய கிராண்ட் மாஸ்டர்' இனியன் சாம்பியன் பட்டம் வென்றார்.பிரான்ஸ் நோசியல் நகரில் சர்வதேச ஓபன் செஸ் போட்டி நடந்தது. ஒன்பது நாடுகளில் இருந்து, 50க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டியில் இந்தியாவின் சார்பில், கோவை தனியார் கலை அறிவியல் கல்லுாரியில் படிக்கும் இனியன், 18, பங்கேற்றார்.'ஸ்வீஸ்' முறையில் நடந்த போட்டியில் இனியன், 7 வெற்றி, 2 டிரா என, 8 புள்ளிகள் பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். உக்ரைன் நாட்டை சேர்ந்த யூரி சோலோனிசென்கோ இரண்டாமிடம், பிரான்ஸ் நாட்டின் கம்பரத் யானிக் மூன்றாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X