பொது செய்தி

தமிழ்நாடு

பேரூர் ஆதீனத்துடன் பா.ஜ., இப்ராஹிம் சந்திப்பு

Added : செப் 01, 2021
Share
Advertisement
கோவை:கோவையில், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரை, பா.ஜ., சிறுபான்மையின பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் சந்தித்தார்.கோவையில், இப்ராஹிம் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்பின், பேரூர் ஆதீனத்துக்கு சென்று, ஆதீனம் மருதாச்சல அடிகளாரை, மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதன்பின், பேரூர் ஆதீனத்துடன், இப்ராஹிம் மதிய உணவு சாப்பிட்டார்.இப்ராஹிம்
 பேரூர் ஆதீனத்துடன் பா.ஜ., இப்ராஹிம் சந்திப்பு

கோவை:கோவையில், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரை, பா.ஜ., சிறுபான்மையின பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் சந்தித்தார்.கோவையில், இப்ராஹிம் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்பின், பேரூர் ஆதீனத்துக்கு சென்று, ஆதீனம் மருதாச்சல அடிகளாரை, மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதன்பின், பேரூர் ஆதீனத்துடன், இப்ராஹிம் மதிய உணவு சாப்பிட்டார்.இப்ராஹிம் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் ஆன்மிக சிந்தனை மற்றும் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது சம்பந்தமாகவும், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளாரை, சந்தித்து பேசினேன். நம்முடைய பாரத பூமி என்பது ஆன்மிகம் சார்ந்த பூமி. நம்முடைய கலாசாரம், பண்பாட்டை நாம் உயர்த்தி பிடிக்க வேண்டும் என்று பகிர்ந்து கொண்டோம். வரக்கூடிய காலங்களில், மதநல்லிணக்க நிகழ்ச்சியை நடத்தி, நமக்கு மத்தியில் இருக்கக்கூடிய கசப்புகளை கலைந்து விட்டு, நாம் அனைவரும் பாரத தாயின் பிள்ளைகளாக ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.சமய நல்லிணக்கம் நடக்கக்கூடிய எந்த நிகழ்வாக இருந்தாலும், நிச்சயம் கலந்து கொள்வதாக, அவர் உறுதி அளித்துள்ளார். தி.மு.க.,வின் பழி வாங்கும் படலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.ஆட்சி தோல்வியை சமாளிப்பதற்கு, எதிர்க்கட்சிகளை முடக்குவது, கைது செய்வது தொடர்கிறது. இதற்கு, உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்கள் தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டுவார்கள்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.'விநாயகர் சதுர்த்தி விழா கோவையில் நடக்கும்'''விநாயகர் சதுர்த்தி விழா கோவையில் அரசின் தடையை மீறி நடைபெறும்,'' என்று வேலூர் இப்ராஹிம் கூறினார்.கோவையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''ஹிந்து சமய நம்பிக்கைகளை கேலி செய்வதும் வழிபாட்டு உரிமைகளை தடுப்பதையும் தி.மு.க., தொடர்ந்து செய்கிறது. விநாயகர் சதுர்த்தி விழா கோவையில் அரசின் தடையை மீறி நடைபெறும். விசர்ஜன ஊர்வலத்தில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி இஸ்லாமியர்களும் பங்கேற்பர். அதில் நானும் பங்கேற்பேன். இது தொடர்பாக ஹிந்துமுன்னணி தலைவரிடம் பேசி உள்ளேன்,'' என்றார்.மத நல்லிணக்கம்அனைத்து மத தலைவர்களையும் சந்திக்க வைத்து, ஆன்மிக ரீதியான மத நல்லிணக்கத்துக்கு வழி செய்வற்காக, தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, பா.ஜ., சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் இப்ராஹிம், கோவை மாவட்டம், பொள்ளாச்சி போடிபாளையம் தத்துவ ஞானசபை தலைவர் சுவாமி வேதாந்தானந்தாவை சந்தித்தார்.பின், அவர், கூறுகையில், ''தமிழகம் முழுக்க உள்ள, மும்மத தலைவர்களை ஒரே இடத்தில் சந்திக்க வைத்து, மத ரீதியாக உள்ள முரண்பாடுகளை களையும் வகையில், ஆன்மிக நல்லிணக்க நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளேன். பா.ஜ., அரசு, சிறுபான்மையினருக்கு எத்தனையோ நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. சில அமைப்புகள், தி.மு.க.,விடம் இருந்து ஓரிரு சீட்டுக்கள் பெற்று, அரசியல் சுயலாபத்துக்காக சொந்த மத மக்களை, தனிமைப்படுத்தி, பிளவு ஏற்படுத்தி, துரோகம் செய்கின்றன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X