திருப்பூர்:வெள்ளகோவில் அருகே கடத்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீட்கப்பட்டார்; ஒருவர் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம், கொண்டூரை சேர்ந்தவர் ரவி, 50; கரும்பு வெட்டும் ஒப்பந்ததாரர். சில நாட்கள் முன், வெள்ளகோவில் பூமாண்டவலசு கிராமத்துக்கு கரும்பு வெட்டும் பணிக்கு, ஐந்து பேரை அழைத்து சென்றார்.கடந்த 29ம் தேதி தொழிலாளருக்கு சம்பளத்தை பட்டுவாடா செய்து விட்டு வெள்ளிங்காட்டு வலசு பகுதியில் நடந்து சென்றார். அங்கு டூவீலர் மற்றும் காரில் வந்த, ஆறு பேர் கொண்ட கும்பல் ரவியை கடத்தினர். வெள்ள கோவில் போலீசார், ரவியை மீட்டனர்.போலீசார் கூறுகையில், 'விழுப்புரத்தில் ரவி, இரண்டு லட்சம் ரூபாயை கடனாக பெற்று, திருப்பி கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். இதன் காரணமாக, ரவியை கடத்தி, மிரட்டி பணத்தை வாங்கி விடலாம் என்று நினைத்து கடத்தியுள்ளனர். ரவி மீட்கப்பட்டுள்ளார்.கடத்தலில் தொடர்புடைய திருவள்ளூர், பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டையை சேர்ந்த நாகப்பன், 40 என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவானவர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE