தமிழ்நாடு

கடலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு! மாணவ, மாணவியர் பாதுகாப்பில் கவனம் தேவை

Added : செப் 01, 2021
Share
Advertisement
கடலுார் : கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என, கடலுார் மாவட்ட ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இன்று (1ம் தேதி) முதல் வகுப்புகள் துவங்கப்படுகிறது. இதனால் மாவட்டம் தோறும் பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள்
கடலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு! மாணவ, மாணவியர் பாதுகாப்பில் கவனம் தேவை

கடலுார் : கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என, கடலுார் மாவட்ட ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இன்று (1ம் தேதி) முதல் வகுப்புகள் துவங்கப்படுகிறது. இதனால் மாவட்டம் தோறும் பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் முடுக்கி விடப்பட்டது. அரசு சார்பில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை மாவட்டம் தோறும் அனுப்பி ஆய்வு செய்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் திறப்பதால் மாணவர்கள் பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி கட்டடங்கள் சீரமைப்பு, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது, மாணவர்கள் அச்சமின்றி பள்ளிக்கு வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று பள்ளிகள் திறப்பதால், கடலுார் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், நிதியுதவி பெறும் பள்ளிகள் உட்பட 496 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. பள்ளி வகுப்பறைகள், கழிவறை, குடிநீர் தொட்டிகள் மற்றும் வளாகம் உள்ளிட்டவை பள்ளியில் பணி புரியும் துாய்மை பணியாளர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி துாய்மை பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

இது குறித்து சி.இ.ஓ., ஆஞ்சலோ இருதயசாமி கூறுகையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மாணவ, மாணவியர் கை கழுவ ஏதுவாக சோப்பு, தண்ணீரும் இருக்க வேண்டும்.

கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய ஒவ்வொரு வகுப்பறையிலும் சானிடைசரை போதுமான அளவில் வைத்திருக்க வேண்டும். வகுப்பறையில் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், சிற்றுண்டி, மதிய உணவு இடைவேளையின்போது ஒன்றாக அமருவதை அனுமதிக்கக்கூடாது.

மாணவர்கள் சொந்தமான தண்ணீர் கொண்டு வருவதை ஊக்கப்படுத்த வேண்டும். இவைகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தடுப்பூசி போட்ட 93 சதவீதத்தினர்


பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் பணி புரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் உட்பட 10 ஆயிரத்து 22 பேர் பணிபுரிகின்றனர். அவர்களில் இது வரை 9,200 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இது, மாவட்டத்தில் 93 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மீதமுள்ள ஆசிரியர்கள் கொரோனா தொற்று பாதித்து குணமடைந்து சில நாட்களே ஆவதால், இன்னும் தடுப்பூசி செலுத்தவில்லை என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X