இந்தியா

வார்டுகள் சீரமைப்பில் குளறுபடி... சட்டசபையில் கூச்சல், குழப்பம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ''வார்டு சீரமைப்பில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்த பிறகு, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்'' என அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களும் ஒரே நேரத்தில் வலியுறுத்தியதால், சட்டசபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில், நேற்று காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன் பேசுகையில், 'பட்ஜெட்டில் உள்ளாட்சி தேர்தல் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
வார்டுகள் சீரமைப்பில் குளறுபடி...  சட்டசபையில் கூச்சல், குழப்பம்

புதுச்சேரி : ''வார்டு சீரமைப்பில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்த பிறகு, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்'' என அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களும் ஒரே நேரத்தில் வலியுறுத்தியதால், சட்டசபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில், நேற்று காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன் பேசுகையில், 'பட்ஜெட்டில் உள்ளாட்சி தேர்தல் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்தப் போகிறோமா, இல்லையா' என கேள்வி எழுப்பினார்.

பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், 'எனது தொகுதியில் 4,000 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 240 பேர் மட்டுமே ஆதிதிராவிடர்கள். ஆனால், வார்டை ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட ஆட்களே வரமாட்டார்கள்.

ஜான்குமார் (பா.ஜ.,): நாமே கவுன்சிலர் போல்தான் உள்ளோம். பிறகு எதற்கு உள்ளாட்சி தேர்தல்? எனது தொகுதியில் நான்கு வார்டு வருகிறது. அதில், மூன்று வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களுக்கு நான் எங்கே போவது.

எதிர்க்கட்சித் தலைவர் சிவா: உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வார்டுகள் மறுசீரமைப்பில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. அதனை நிவர்த்தி செய்த பின் தேர்தல் நடத்த வேண்டும்.

பிரகாஷ்குமார் (சுயே.,): எனது தொகுதி வார்டுகளை பக்கத்து தொகுதி யில் சேர்த்துள்ளனர். அங்கு எப்படி சென்று நான் ஓட்டு கேட்பது. இதே கருத்தை, சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் பி.ஆர்.சிவா, நேரு ஆகியோர் வலியுறுத்தினர்.

செந்தில்குமார் (தி.மு.க.,): கிராமங்களை ஒருங்கிணைத்து பஞ்சாயத்தை உருவாக்கலாம். எக்காரணத்தை கொண்டும் கிராமத்தை பிரிக்கக் கூடாது. அப்படி செய்தால், ஏகப்பட்ட பிரச்னை ஏற்படும். எனது தொகுதியில், குருவிநத்தம் கிராமத்தை பிரித்து, சோரியாங்குப்பம் கிராமத்தில் இணைத்துள்ளனர்.

இதனால், குருவிநத்தம் கோவில் திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. அதனால், தற்போது செய்துள்ள வார்டு மறுசீரமைப்பை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் முறையாக கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த தொகுதிக்குள் வார்டுகள் வருமாறு மறுவரையறை செய்து தேர்தலை நடத்த வேண்டும்.

இதே கருத்தை எதிர்க்கட்சி தலைவர் சிவா, சுயேச்சை எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதனால், சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

சம்பத் (தி.மு.க.,): உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் தேர்தலை நிறுத்த முடியாது. வேண்டுமானால், கொரோனா மூன்றாம் அலை எதிர் வருவதை சுட்டிக்காட்டி தடை பெற முயற்சிக்கலாம். மூன்றாம் அலை ஓய்ந்த பிறகு தேர்தல் நடத்தலாம். அதற்குள், வார்டு பிரிப்பில் உள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்திடலாம். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.


தரமான அரிசி வழங்க வேண்டும்


சட்டசபையில், ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்குவது குறித்து நடைபெற்ற விவாதம் வருமாறு

பி.ஆர்.சிவா (சுயேச்சை): ரேஷனில் தரமான அரிசி வழங்க வேண்டும். மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கும் அரிசி வழங்க வேண்டும்.

ஜான்குமார் (பா.ஜ.,): இரண்டு கிலோ அரிசி கொடுத்தாலும் தரமானதாக வழங்க வேண்டும்.

சிவசங்கர் (சுயேச்சை): மொத்தமாக அரிசி வழங்கு வதைவிட, 5 கிலோ கோதுமை, 5 கிலோ அரிசி என வழங்க வேண்டும். தரமான அரிசி வழங்க வேண்டும் என, அனிபால் கென்னடி, ஜான்குமார், சிவசங்கர், நாஜிம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் ஒரே நேரத்தில் வலியுறுத்தியதால், சட்டசபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

அமைச்சர் லட்சுமிநாராயணன்: மாநில அரசு அரிசிக்கு பதில் பணமாக வழங்கி வருகிறது. மத்திய அரசின் 'கரீப் கல்யாண்' திட்டத்தில் தான் அரிசி வழங்கப்படுகிறது. முதல்வரிடம் கூறி, தரமான அரிசி வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

அமைச்சர் தேனீ ஜெயக்குமார்; குடோன்களில் அடுக்கி வைக்கப்படும் அரிசி மூட்டைகளில், கீழே உள்ள அரிசி மூட்டைகள் கெட்டுவிடுகின்றன. மற்ற மூட்டைகளில் அரிசி தரமானதாகவே உள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் நேரடியாக குடோன்களில் இருந்து தரமான அரிசியை எடுத்துச் சென்று பொதுமக்களுக்கு வழங்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X