இந்தியா

உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்த வேண்டும்: நாஜிம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி : சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க.. எம்.எல்.ஏ., நாஜிம் நேற்று பேசியதாவது:தற்போது தாக்கல் செய்த பட்ஜெட், உங்களுக்கு மன நிறைவு தராது. கடந்த ஆண்டைவிட நிதி குறைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய கொடை ரூ. 1,000 கோடி கூடுதலாக வாங்கினால் தான், ஓரளவுக்கு அரசு நிமிர்ந்து நிற்க முடியும்.மாநில வருவாய் கடந்த ஆண்டு ரூ. 4755 கோடி. இந்தாண்டு ரூ. 6196 கோடி என

புதுச்சேரி : சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க.. எம்.எல்.ஏ., நாஜிம் நேற்று பேசியதாவது:தற்போது தாக்கல் செய்த பட்ஜெட், உங்களுக்கு மன நிறைவு தராது. கடந்த ஆண்டைவிட நிதி குறைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய கொடை ரூ. 1,000 கோடி கூடுதலாக வாங்கினால் தான், ஓரளவுக்கு அரசு நிமிர்ந்து நிற்க முடியும்.

மாநில வருவாய் கடந்த ஆண்டு ரூ. 4755 கோடி. இந்தாண்டு ரூ. 6196 கோடி என கொடுத்துள்ளீர்கள். கூடுதலான நிதியை கொரோனா வரி விதித்தால் மட்டுமே திரட்ட முடியும். கூடுதல் வரி விதித்தால் இருக்கும் விற்பனையும் குறைந்து விடும்.உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் மட்டுமே மத்திய அரசிடம் இருந்து நிதி வரும் என கூறி, கடந்த 2006ல் தேர்தல் நடந்தது. 5 ஆண்டுகள் முடிந்தும், மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை.

காரணம், நிதி கமிஷனில் புதுச்சேரி இல்லை என தெரிவிக்கப்பட்டது. நிதி வராதபோது ஏன் தேர்தலை நடத்த வேண்டும். இதை தெளிவுபடுத்தி விட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.பட்ஜெட்டில் மாநில அந்தஸ்து குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை. கடன் தள்ளுபடி இல்லை என மத்திய அரசு கூறி உள்ளது. கோவா மாநிலமாக மாறியபோது, பல ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

கோவாவிற்கு அளித்தபோது ஏன் புதுச்சேரிக்கு தள்ளுபடி செய்ய முடியாது.டில்லி யூனியன் பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை மத்திய அரசு வழங்குகிறது. புதுச்சேரியில் அரசு ஊழியர் ஓய்வூதியமாக ரூ.1050 கோடி வழங்குகிறோம். டில்லியை போல புதுச்சேரி அரசு ஊழியர் ஓய்வூதியத்தை மத்திய அரசு வழங்கினால், ஒய்வூதிய தொகைக்காக ஒதுக்கப்படும் தொகையில் பல திட்டங்களை கொண்டுவர முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X