இந்தியா

சாலை, கழிவுநீர் வாய்க்கால் இன்றி அண்ணாமலை நகர் மக்கள் அவதி

Added : செப் 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி : செல்லப்பெருமாள்பேட்டை அண்ணாமலை நகரில் சாலை வசதி இல்லாததால், குடியிருப்புவாசிகள் இணைந்து, தற்காலிகமாக மண் கொட்டி, சாலை அமைத்து வருகின்றனர்.லாஸ்பேட்டை, செல்லப்பெருமாள்பேட்டை, நந்தா நகர் முதல் தெரு விரிவாக்கத்தில், அண்ணாமலை நகர் உள்ளது. இந்த நகர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மின்துறை மூலம் வீடுகளுக்கு மின்

புதுச்சேரி : செல்லப்பெருமாள்பேட்டை அண்ணாமலை நகரில் சாலை வசதி இல்லாததால், குடியிருப்புவாசிகள் இணைந்து, தற்காலிகமாக மண் கொட்டி, சாலை அமைத்து வருகின்றனர்.

லாஸ்பேட்டை, செல்லப்பெருமாள்பேட்டை, நந்தா நகர் முதல் தெரு விரிவாக்கத்தில், அண்ணாமலை நகர் உள்ளது. இந்த நகர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மின்துறை மூலம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. குடிநீர் இணைப்பும் அளிக்கப் பட்டுள்ளது.ஆனால், இந்நகரில் இதுவரை சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் வசதி செய்துதரப்படவில்லை. இதுகுறித்து இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படவில்லை.

சாலை, கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால், மழை காலத்தில் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். தற்காலிகமாக கட்டட இடிபாடுகளுடன் கூடிய மண்ணை கொட்டி, சாலை அமைத்து வருகின்றனர். அண்ணாமலை நகரில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X