இந்தியா

சபாநாயகர் செல்வம் சென்னையில் 'அட்மிட்'

Added : செப் 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி சபாநாயகர் செல்வத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர், ஆக., 26ல் துவங்கி நடந்து வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க, சபாநாயகர் செல்வம் காலை, 9:30 மணிக்கு வந்தார்.அப்போது, அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே, அருகில் உள்ள அரசு

புதுச்சேரி : புதுச்சேரி சபாநாயகர் செல்வத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர், ஆக., 26ல் துவங்கி நடந்து வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க, சபாநாயகர் செல்வம் காலை, 9:30 மணிக்கு வந்தார்.அப்போது, அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார். டாக்டர்கள், இ.சி.ஜி., பரிசோதனை செய்தனர். அதில், லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து சிகிச்சை அளித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சபாநாயகரை, கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணன்குமார், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சிவா, நாஜிம், செந்தில்குமார், சம்பத், என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், லட்சுமிகாந்தன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

கவர்னர் தமிழிசை கூறுகை யில், ''சபாநாயகர் செல்வம் நலமுடன் உள்ளார். சில பரிசோதனைகள் செய்ததில், அவருக்கு மேல் சிகிச்சை தேவை எனக் கூறப்பட்டுள்ளது. அதனால், சென்னைக்கு செல்கிறார்,'' என்றார்.

சபாநாயகர் செல்வத்திற்கு ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு, 'ஸ்டென்ட்' பொருத்தப்பட்டுள்ளது. இதனால், மேல் சிகிச்சைக்காக, சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு நேற்று மதியம், 12:00 மணிக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார்.நேற்றைய சட்டசபையை, துணை சபாநாயகர் ராஜவேலு நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், 'சபாநாயகருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அவர் பூரண குணமடைந்து, மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்திப்போம்'' என்றார்.அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சபாநாயகர் செல்வம் தற்போது நலமுடன் உள்ளார். அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்' என கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X